Indian 2: ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் தாத்தா! முதல் நாளில் அள்ளியது எத்தனை கோடிகள் தெரியுமா?
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த கணிப்பை இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்து அதன் போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் முடிவதற்கு முன்னரே இந்தியன் 2 படத்தினை இயக்கும் பணிகளை துவங்கியிருந்தார் ஷங்கர். இதனால் சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் ஆகியோரை ஒரே நேரத்தில் இயக்குவது மட்டும் இல்லாமல் இரண்டு படங்களும் மெஹா ஹிட் ஆகி, மாபெரும் வெற்றியைப் பெற்ற படங்கள் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்தியன் 2 படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோ பாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் நேற்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

ட்ரெண்டிங்: இதனால் படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் தெலுங்கில் படத்தின் டைட்டிலான பாரதியடு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதேபோல் இந்தியன் 2 என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்தது. படத்திற்கு தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளிலும் புரோமோஷன் செய்யப்பட்டது. இதனால் இந்தியன் 2 ஃபீவர் வெளிநாடுகளிலும் தொற்றிக்கொண்டது எனலாம்.

படம் எப்படி இருக்கு?: படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கூறியது, இந்தியன் 2 படம் இந்தியன் 3 படத்திற்கான ஒரு லீட் மட்டும்தான். இது மட்டும் இல்லாமல், படத்தின் முதல் பாதி சுமாராகவே உள்ளது என்றும், இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது என்றும் கூறியிருந்தனர். மேலும் இந்தியன் 2 படத்தில் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை மைய்யப்படுத்திதான் படம் எடுக்கப்பட்டுள்ளது எனும்போது, தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழல், லஞ்சம் குறித்து இன்னும் தைரியமாக பேசியிருக்கலாம் என கூறுகின்றனர்.

முதல் நாள் வசூல்: திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல்களைப் பதிவிடும் சாக்நிக் வலைதளம், இந்தியாவில் இந்தியன் 2 படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்திருக்கும் என பதிவிட்டுள்ளது. அதில், முதல் நாளில் இந்தியன் 2 இந்தியா முழுவதும் சுமாராக ரூபாய் 26 கோடி வசூல் செய்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் படத்தின் வசூல் விபரம் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











