Indian 2 Box Office: முதல் நாளில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளுமா இந்தியன் 2? வசூல் கணிப்பு இதோ!

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் சுமார் 5000+ ஸ்க்ரீன்களில் வெளியாகிறது. தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்தியன் 2 படம் வெளியாகிறது.

இந்தியன் முதல் பாகம் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த நிலையில், 2ம் பாகத்துக்கும் உலகளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் புக்கிங் சிறப்பாகவே சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Indian 2 Box Office Kamal Haasan Shankar

இந்நிலையில், முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்கிற பாக்ஸ் ஆபிஸ் பிரெடிக்‌ஷனை இங்கே காணலாம் வாங்க..

இந்தியன் 2 கதை எப்படி இருக்கும்?: சந்துரு கமலை கொன்று விட்டு சேனாபதி கமல் வெளிநாட்டில் இருப்பது போல இந்தியன் படத்தை ஷங்கர் முடித்திருந்தார். 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் லஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்துக் கொண்டு ஊழலை தடுக்க சில விஷயங்களை செய்கின்றனர். இந்தியன் தாத்தா வந்து விட்டார் என்கிற அச்சத்தை மீண்டும் மக்களுக்கு கொடுக்க நினைக்கின்றனர். இந்த தகவல் உண்மையாகவே வெளிநாட்டில் வயது முதிர்ந்த நிலையில், வாழ்ந்து வரும் இந்தியன் தாத்தா காது வரைக்கும் எட்ட யார் அவர்கள் என்பதை கண்டறிய வரும் இந்தியன் தாத்தா சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் சிக்கலில் சிக்கியிருப்பதை அறிந்து அவர்களை மீட்கிறார். அதன் பின்னர், தாத்தாவின் தாண்டவம் தான் படமாக இருக்கும் என்கின்றனர். ஷங்கர் இதே மாதிரி படத்தை எடுத்து வைத்துள்ளாரா? அல்லது ஸ்பெஷல் ட்விஸ்ட்டை வைத்திருக்கிறாரா? என்பது நாளை படம் வெளியானதும் தெரிந்து விடும்.

தமிழ்நாடு ப்ரீ டிக்கெட் புக்கிங் வசூல்: 2,56,262 டிக்கெட்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் உள்ள 750 தியேட்டர்களில் படத்துக்கு ப்ரீ புக்கிங் ஆகியிருப்பதாக கூறுகின்றனர். 4.53 கோடி ரூபாய் வசூல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலமாகவே இதுவரை கலெக்ட் செய்திருப்பதாகவும் முதல் நாள் வசூல், தமிழ்நாட்டில் மட்டும் 6 கோடியை தாண்டும் என்கின்றனர்.

உலகளவில் 20 கோடி: அதே போல உலகளவில் ப்ரீ புக்கிங் டிக்கெட் மட்டுமே 20.7 கோடி ரூபாய் வசூலை இப்போதே ஈட்டியிருப்பதாகவும் இன்று இரவு வரை மேலும், இது அதிகரிக்கும் என்கின்றனர். நாளை டைரக்டாக தியேட்டருக்கு சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு படம் பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகரித்தால், அதிகபட்சமாக முதல் நாளில் 50 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் இந்தியன் 2 வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

100 கோடி வசூல் சாத்தியமா?: 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தியன் 2 முதல் நாளிலேயே 100 கோடி வசூலை பெறுமா என்றால் அதற்கு அதிகபட்சமாக வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து விட்டால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் புக்கிங் சூடு பறக்கும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X