அடுத்தடுத்து 3 படம்.. கதை ரெடியா இருக்கு.. இயக்குநர் ஷங்கரின் மாஸ் பிளான்!
சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஜூலை 12 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர் தனது அடுத்த படம் குறித்து பேசினார்.
கடந்த வாரம் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. முதல் பாகத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், இந்த படத்தில் ஒரே வேடத்தில் நடித்திருக்கிறார். இன்றை அரசியல் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே இந்தியன் 2 உருவான பின்னணி என்று படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார் . ஷங்கரின் பிரம்மாண்ட காட்சி அமைப்புகள் , கமலின் நடிப்பு , அனிருத்தின் மிரட்டும் பின்னணி இசை மற்றும் பிற கதாபாத்திரங்கள் என குடும்பங்கள் அனைவரையும் கவரும் ஆக்ஷன் என்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படங்கள்: படம் வெளியான இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஷங்கர், அடுத்துத் இயக்கப்போகும் படங்களைப் பற்றி பேசினார். அதில், தற்போது எனக்கு 3 ஐடியாக்கள் வந்துள்ளன. ஒன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படத்தை இயக்க வேண்டும், அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஒரு படம், மற்றொன்று சைஃபை கதைக்களத்துத்துடன் ஒரு படம் அந்த படத்தை 2012 என்ற பெயரில் உருவாக்க உள்ளதாக கூறினார். இந்த மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய பொருட்செலவில், நிறைய VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்படங்களில் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
கமல் பேச்சு: இதைத்தொடர்ந்து பேசிய கமல், இந்தியன் 2 படம் 5 வருடங்களாக எடுக்கப்பட காரணம் அதில் பணியாற்றிய பிரபலங்களோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களோ இல்லை. இயற்கை தான் காரணம். கொரோனா, விபத்து என பல விஷயங்கள் இடையூறாக வந்தது. அதிலிருந்து எங்களை மீட்டு தோளில் தூக்கி வந்த லைகா நிறுவனத்துக்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும் இந்தியன் 2 மற்றும் 3 ஆம் பாகம் கடமைப்பட்டுள்ளது. இப்படத்தின் வெற்றியை முதல் ஆளாக அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது எனக்கும், ஷங்கருக்கும் ஆசை என்றார்.
பல பிரச்சனைகள்: கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் , படப்பிடிப்பில் விபத்து என பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. பல்வேறு சவால்களைக் கடந்து இந்தியன் 2 படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் சேனாதிபதியை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











