என்னாது, 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா?: உண்மை இதோ
சென்னை: இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 22 ஆண்டுகள் கழித்து எடுக்கிறார்கள்.
படப்பிடிப்பை துவங்க செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தாமதம்
செட் அமைக்கும் பணி தாமதமானதால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி துவங்க முடியவில்லை. இந்நிலையில் ஷங்கர் அடுத்த பட வேலையில் வேறு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்துவிட்டு இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று பேச்சு கிளம்பியது.

ஷங்கர்
இந்தியன் 2 தான் கமல் ஹாஸன் நடிக்க உள்ள கடைசி படமாகும். இந்நிலையில் அந்த படம் கைவிடப்படுவதாக பரவிய தகவலை பார்த்து கமல் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அதன் பிறகே அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது நிம்மதி அடைந்தனர்.

வதந்தி
இந்தியன் 2 படத்தை கைவிடவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு வரும் 18ம் தேதி பொள்ளாச்சியில் துவங்க உள்ளதாம். அதன் பிறகு படக்குழு உக்ரைனுக்கு செல்கிறது. முதல் பாகத்தை போன்றே இதிலும் கமல் முதியவர், இளைஞர் என்று இரண்டு தோற்றங்களில் நடிக்கிறாராம்.

காஜல்
இந்தியன் 2 படத்திற்காக காஜல் அகர்வால் களரி கற்றுக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதன் மூலம் தனது கெரியர் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் முறையாக அவர் கமலுடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











