விக்ரம் முதல் நாள் வசூலையே முந்தாத இந்தியன் 2?.. சரிந்தது ஷங்கர் சாம்ராஜ்யம்.. இத்தனை கோடி தானா?
சென்னை: தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பிரம்மாண்ட படங்களை எப்படி உருவாக்குவது என ராஜமெளலிக்கு முன்னதாக கற்றுத் தந்ததே ஷங்கர் தான். ஜெண்டில்மேன் படத்தில் ஆரம்பித்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 என பல படங்களை இயக்கியுள்ளார்.
ஐ மற்றும் 2.0 படங்கள் வெளியான போது தான் ஷங்கர் முதன் முதலில் பயங்கரமான விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்தார். ஆனால், வசூல் ரீதியாக அந்த படங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து எஸ்கேப் ஆகி விட்டார்.

அதன் பின்னர் இந்தியன் 2 படத்தை ஷங்கர் ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் நேற்று வெளியான இந்தியன் 2 திரைப்படம் சுக்கு நூறாக உடைத்து விட்டது.
சரிந்தது ஷங்கர் சாம்ராஜ்யம்: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்த ஷங்கர் உருவாக்கிய அட்லீ எல்லாம் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி 1000 கோடி வசூலை பார்த்து விட்டார். இந்தியன் 2 படத்தின் மூலம் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு முதல் முறையாக 1000 கோடி ரூபாய் வசூல் படத்தை கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் கூட வருமா? என்கிற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.
முதல் நாள் வசூல்: தமிழ்நாட்டில் இந்தியன் 2 திரைப்படம் அதிகபட்சமாக முதல் நாளில் 17 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. தெலுங்கில் 7 கோடி ரூபாயும் இந்தியில் 2 கோடி ரூபாய் அளவில் என மொத்தமாக இந்தியளவில் 26 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் செய்துள்ளது. ஓவர்சீஸில் கூட இந்த படத்துக்கு பெரிதாக ஓபனிங் இல்லை என்கின்றனர். அதிகபட்சமாக 30 முதல் 35 கோடி ரூபாய் வருமா? என்பதே சந்தேகம் தான் என்கின்றனர்.
விக்ரம் படத்தை முந்தல: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் படம் முதல் நாளில் இந்தியளவில் 32 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. அந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே 29 கோடி ரூபாய் வசூலையும் தெலுங்கில் 2.8 கோடி ரூபாய் வசூலையும் இந்தியில் 28 லட்சம் ரூபாய் வசூலையும் ஈட்டியது. ஆனால், அதற்கு பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்கு இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் உள்ளது.


Click it and Unblock the Notifications











