இந்தியன் 2 சண்டை காட்சி லீக்.. செம்ம டென்ஷனான ஷங்கர்.. சென்னை அருகே பிரம்மாண்ட செட்!

Recommended Video

இந்தியன் 2 படத்தில் பிரமாண்ட சண்டைக்காட்சிகள்.. எத்தனை பேர் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி வீடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள இவிபி ஸ்டூடியோவில், பிரம்மாண்ட செட் அமைத்து இந்தியன் 2 படத்திற்கான சண்டை காட்சியை ஷங்கர் படமாக்கி வருகிறார்.

டைட் செக்யூரிட்டியையும் மீறி எப்படி சண்டைக் காட்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன என செம்ம டென்ஷனாகி உள்ளாராம் இயக்குநர் ஷங்கர்.

ஃபாரின் ஸ்டன்ட் கலைஞர்கள்

ஃபாரின் ஸ்டன்ட் கலைஞர்கள்

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் போபால், குவாலியர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சென்னை அருகே இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் படமாக்கப்பட்டு வருகிறது. இங்கு பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. ஃபாரின் ஸ்டன்ட் கலைஞர்கள் பலரும் உழைத்து வருகின்றனர்.

ஏராளமான குதிரைகள்

ஏராளமான குதிரைகள்

மேலும், லீக்கான வீடியோவில், ஏராளமான குதிரைகள், மற்றும் பிரம்மாண்ட அரங்கம் இடம்பெற்றுள்ளது. கிரேன்களில் கேமராக்களை பொருத்தி பரபரப்பாக நடைபெற்று வரும் சண்டை காட்சிகளின் ஷூட்டிங் வீடியோக்களை சிலர் மறைமுகமாக எடுத்து இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

செம்ம டென்ஷன்

செம்ம டென்ஷன்

இயக்குநர் ஷங்கர், பயங்கர கட்டுப்பாட்டில் தான் ஷூட்டிங்கை நடத்துவார். அப்படி இருந்தும், 2.0 படத்தின் ஷூட்டிங் டெல்லியில் நடந்த போது, அக்‌ஷய் குமாரின் கெட்டப் சமூக வலைதளத்தில் லீக்காகி வைரலாகின. இந்தியன் 2 படத்தின் சண்டை காட்சிகள் தற்போது லீக்காகி உள்ள நிலையில், செம்ம டென்ஷன் ஆகியுள்ளாராம் ஷங்கர்.

படபிடிப்பில் கமல்

படபிடிப்பில் கமல்

அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த நடிகர் கமல்ஹாசன், சென்னையில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னதாக நடந்த பிளாஷ்பேக் போர்ஷன்கள் தற்போது படமாக்கப்பட்டு வரும் தகவல்கள் லீக்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகி வருகிறது.

இந்தியன் கிளைமேக்ஸ்

இந்தியன் கிளைமேக்ஸ்

இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, விமானங்கள் சூழ ஏர்போர்ட்டில் நடைபெற்று இருந்தது. அதனை விட பிரம்மாண்டமான ஒரு விமான காட்சியையும், தற்போது இந்தியன் 2 படக்குழு சென்னையில் படமாக்கி வருகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் விமானங்களின் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் கசிந்து வருகிறது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இந்தியன் 2 ஷூட்டிங்கில் சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் இணைந்துள்ளார். 85 வயது பாட்டியாக காஜல் அகர்வால், சண்டையிடும் காட்சிகளும் சென்னையிலேயே படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடைபெற்ற நிலையில், இந்தியன் 2 படமும் சென்னையில் நடைபெற்று வரும் தகவல் அறிந்த ரசிகர்கள், ஷூட்டிங்கை பார்க்க முயற்சி செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X