இந்தியன் 2... சத்தமில்லாமல் சர்ப்பிரைஸ் தந்த ஷங்கர்!

பொங்கலையொட்டி இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Recommended Video

ரஹ்மானுக்கு போட்டியாக அனிருத்தை களமிறங்கிய ஷங்கர்- வீடியோ

சென்னை: கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னர் கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் கமல் நடித்திருந்தார். ஊழலுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரான சேனாபதி நடத்தும் போராட்டமே படத்தின் கதைக்களம்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த கமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

இந்தியன் 2 அறிவிப்பு:

படத்திற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கமல்ஹாசனின் பிறந்த நாளில் வெளியிட்டது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக முத்துராஜ், பாடல்களை தாமரை, விவேக் ஆகியோர் எழுதுகின்றனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கான பா்ஸ்ட் லுக் போஸ்டரை பொங்கலையொட்டி படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பா்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல்ஹாசனின் சேனாபதி கதாபாத்திரம் வா்மக்கலையுடன் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் உள்ளது.

வர்மக்கலை:

வர்மக்கலை:

22 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் இரண்டாம் பாகம் என்றபோதும், கமல் அதே வயதான தோற்றத்தில் கம்பீரமாக போஸ்டரில் தோற்றமளிக்கிறார். இந்தியன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் வா்மக்கலையை ஆயுதமாகப் பயன்படுத்தி இருப்பார். இரண்டாம் பாகத்திலும் அதே தான் அவரது ஆயுதம் என்பது இந்த போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.

சிம்புவுக்கு பதில் சித்தார்த்:

சிம்புவுக்கு பதில் சித்தார்த்:

வருகின்ற 18ந் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமலின் பேரனாக முன்பு சிம்பு நடிப்பதாக இருந்தது. தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார். நாயகியாக காஜல் அகர்வாலும், தென் கொரிய நடிகை ஒருவரும் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X