Indian 2: ப்பா.. ப்யூர் கூஸ்பம்ப்ஸ்.. வேறலெவல் அனிருத்.. இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்படி?
சென்னை: "என் தாய் மண்மேல் ஆணை" என பா. விஜய் ஒவ்வொரு வரிகளையும் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலில் செதுக்க அனிருத்தின் இசை மற்றும் குரல் ப்யூர் கூஸ்பம்ப்ஸாக உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இந்தியன் தாத்தா அறிமுக வீடியோவில் அனிருத் இசையமைத்த கம்பேக் இந்தியன் தீம் வெளியானது.

ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இந்தியன் படத்துக்கு இசையமைத்த இசையுடன் கம்பேர் செய்து பலரும் அந்த பாடலை விமர்சித்து தள்ளினர். இந்நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த "பாரா" பாடலை அனிருத் கொடுத்துள்ளார் என தெரிகிறது.
இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: கடந்த ஆண்டு ஜெயிலர் மற்றும் லியோ படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்த அனிருத் இந்த ஆண்டு இதுவரை அவர் இசையில் எந்த ஒரு படமும் வரவில்லையே என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், தேவரா மற்றும் இந்தியன் 2 என அடுத்தடுத்த பான் இந்தியா படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தேவரா திரைப்பட பாடல் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியானது.
தலைவன் தலைவன் தான்: இந்தியன் 2 படத்துக்கு ஏ ஆர் ரஹ்மானை தவிர்த்துவிட்டு ஷங்கர் அனிருத்தை இசையமைக்க வைத்துள்ளார். இது தொடர்பாக ஆரம்பத்திலேயே அனிருத் பேட்டி ஒன்றில் தலைவன் தலைவன் தான் தொண்டன் தொண்டன் தான், கண்டிப்பாக இந்தியன் ஆல்பத்துடன் இந்தியன் 2 ஆல்பத்தை ரசிகர்கள் கம்பேர் செய்வார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார் அளவுக்கு எல்லாம் என்னால் இசையமைக்க முடியாது. ஏதோ எனக்குத் தெரிந்ததை முடிந்தவரை சிறப்பாக கொடுக்க முயற்சிக்கிறேன் எனக்கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது தனது பெஸ்ட் பாடலை இந்தியன் 2 படத்துக்காக அனிருத் கொடுத்து இருப்பதாகவே தெரிகிறது.
பா. விஜய் மிரட்டல்: சிவாஜி படத்தில் "ஒரு கூடை சன் லைட்" என ஸ்டைலாக பாடல் எழுதவும் தெரியும் பீரியட் படத்துக்கு சுதந்திர போராட்ட உணர்வை தூண்டும் விதமாகவும் பாடல்களை தனக்கு எழுத தெரியும் என்பதை நிரூபித்துள்ளார் பா. விஜய். "கன்னங் கரு இரவு போதாதா நமக்கு.. வெள்ளைக்கார நிலவு வான்மீது எதுக்கு" என வெண்ணிலாவையே வெள்ளையனுடன் கம்பேர் செய்து எழுதியுள்ள வரிகளும் அதில் இடம்பெறும் பெண் குரலும் நிச்சயம் ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.
அனிருத் அசத்தல்: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தியன் படத்தின் ஆல்பம் அளவுக்கு பாடல்களோ இந்தியன் படம் அளவுக்கு இந்தியன் 2 படமோ வருமா என்பது சந்தேகம் தான். ஆனால், நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அனிருத் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும் பாடலை கொடுத்து தனது பெயரை காப்பாற்றிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயம் இந்தியன் 2 படத்திற்கான ஹைப் இதற்கு பின் எகிறும் என்றே தெரிகிறது.

ஆடியோ வெளியீட்டு விழா: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறப் போவதாக பாடலின் இறுதியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படம் ரிலீசாக காத்திருக்கிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இந்தியன் 2 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











