Indian 2: கதறவிட்ட அனிருத்.. இந்தியன் 2 மொத்த ஆல்பமும் ரிலீஸ்.. ஒன்னாவது உருப்படியா இருக்கா பாஸ்?

சென்னை: தேசிய விருது வென்ற இந்தியன் படத்தின் 2ம் பாகம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. இந்தமுறை ஏ.ஆர். ரஹ்மானை விடுத்து அனிருத் பக்கம் ஷங்கர் தாவிய நிலையில், ஒவ்வொரு பாடலையும் கேட்ட ரசிகர்கள் கதறும்படி மொத்த ஆல்பத்தையும் ஒரு வழி பண்ணி வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடல்களுக்கு எல்லாம் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் எப்படித்தான் சம்மதித்தனர் என்று தான் தற்போது பாடல்கள் முழுவதையும் கேட்டவர்கள் யோசித்து சோஷியல் மீடியாவில் விவாதித்து வருகின்றனர்.

கடைசியாக அனிருத் இசையில் முதலில் வெளியாகி மொக்கை வாங்கிய கம்பேக் இந்தியன் பாடலே இந்த ஆல்பத்தில் சூப்பரா இருக்கு என சொல்ல வைத்து விட்டார் அனிருத். செம கில்லாடி தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Kamal Haasan Indian 2 Lyca Anirudh Indian 2 audio launch 2 2


இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சற்றுமுன் தொடங்கிய நிலையில், அனிருத் அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும் ரசிகர்கள் அந்த பாடல்களை கேட்டு ரசிக்கலாம் அல்லது கடுப்பாகலாம்.

இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச்: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் அனிருத் லைவாக பாடல்களை பர்ஃபார்ம் செய்து ஆடியன்ஸை சந்தோஷத்தில் ஆழ்த்த உள்ளார்.

இந்தியன் 2 பாடல்கள்: ஜெயிலர், லியோ படங்களுக்கு தாறுமாறான ஆல்பத்தை கொடுத்த அனிருத் இந்தியன் 2 படத்துக்கு மரண மாஸான ஆல்பத்தை கொடுத்துள்ளார். பாரா, கேலண்டர் சாங், நீலோற்பம், ஸகா ஸகா, கம்பேக் இந்தியன் மற்றும் கதறல்ஸ் என்றே ஒரு பாடலை போட்டுள்ளார்.

கதறவிட்ட அனிருத்: இந்தியன் தாத்தா வராரே கதறவிட போறாரே என அனிருத் ஆலுமா டோலுமா ரேஞ்சுக்கு ஒரு பீட் சாங்கை இந்தியன் 2 படத்துக்கு போட்டுள்ளார். அதிகப்படியாக அது மாண்டேஜ் பாடலாக இடம்பெறும் என்றே தெரிகிறது. ஆனால், எந்தவொரு பாடலும் இந்தியன் படத்தின் ஆல்பத்தை பின்னுக்கு தள்ளியதா? என்கிற கேள்விக்கு வாய்ப்பே இல்லை ராஜா என்பது மட்டுமே பதிலாக உள்ளது.

தலைவன் தலைவன் தான்: ஏ.ஆர். ரஹ்மான் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியன் படத்துக்காக அந்த படத்தின் கதையின் அழுத்தம் மற்றும் ஆற்றல் அறிந்து ஒவ்வொரு பாடலையும் கொடுத்திருப்பார். ஆனால், ஷங்கர் இந்த முறை படத்தையே எப்படி எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அந்த பாரா பாடல் மட்டுமே பீரியட் போர்ஷன் பாடல் என தெரிகிறது. அதை தவிர்த்து அனைத்துமே பிரசன்ட்டில் இடம்பெறும் பாடல்கள் தான். ”அக்கடாங்கு”, “பச்சை கிளிகள் தோளோடு”, “டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா”, “கப்பலேறி போயாச்சு”, ”மாயா மச்சிந்த்ரா” என ஏ.ஆர். ரஹ்மான் போட்ட பாடல்கள் அனைத்துமே எவர்க்ரீன் பாடலாக உள்ள நிலையில், அனிருத் ஃபாஸ்ட் ஃபுட் காலத்துக்கே ஏற்ப ஃபாஸ்ட்டான பாடல்களை போட்டுள்ளார். படத்தின் கதையோடு பாடல்கள் ஹிட் அடித்தால், நல்ல விஷயம் தான். இல்லையென்றால் கதறல்ஸ் தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X