இந்த இத்துப்போன இன்ட்ரோவுக்குத்தான் ரஜினி, ராஜமெளலி, அமீர் கானா? இந்தியன் 2 ட்ரோல் ஸ்டார்ட்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ காட்சிக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில், இன்ட்ரோ வெளியானதும் கமான் இந்தியன் என சொல்லாமல் ரசிகர்கள் கோபேக் இந்தியன் என கலாய்த்து வருகின்றனர்.
இந்த இத்துப்போன இன்ட்ரோவை வெளியிடத்தான் ரஜினிகாந்த், அமீர்கான், மோகன்லால், ராஜமெளலி மற்றும் கிச்சா சுதீப் வெளியிட்டுள்ளார்களா என ரசிகர்கள் ஒரேயடியாக ஓட்டி வருகின்றனர்.

பழைய இந்தியன் படத்தின் காட்சிகள் கொடுக்கும் கூஸ்பம்ப்ஸில் புதிய இந்தியன் 2வில் ஒரு சீன் கூட கொடுக்கவில்லையே என ஆண்டவர் ரசிகர்களே அப்செட் ஆகி உள்ளனர்.

மொக்கை இன்ட்ரோ: ரஜினிக்கு தாறுமாறாக ஹுகும் போட்ட அனிருத் கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தில் கொடுத்த பிஜிஎம் அளவுக்கு எல்லாம் கொடுக்காமல் காமிக் பாணியில் கமான் இந்தியன் போட்டு ஆரம்பத்திலேயே கடுப்பேற்றி உள்ளாரே என ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

1000 கோடி மறந்துட வேண்டியதுதான்: ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் ஆரம்ப இன்ட்ரோ எல்லாம் வெறித்தனமாக இருந்த நிலையில், அவருக்கு ஷங்கர் சரியான டஃப் கொடுப்பார் என்று பார்த்தால் சிவாஜி படத்தை போலவும் பழைய இந்தியன் படத்தை போலவும் எடுத்து வைத்திருக்கிறாரே, சமீபத்தில் அட்லீ இயக்கிய ஜவான் படத்திலேயே பான் இந்தியா படத்துக்கான குவாலிட்டி இருந்த நிலையில், இந்தியன் 2 பல ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில், அதன் பிரதிபலிப்பு தெளிவாக தெரிகிறது என்றும் 1000 கோடி வசூல் கனவை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட வேண்டியது தான் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அவுட்டேட்டட் ஆகிட்டாரா ஷங்கர்: இந்தியன் 2, இந்தியன் 3 என அடுத்த ஆண்டே இரு படங்களையும் வெளியிட்டு ஒட்டுமொத்தமாக 1000 கோடி வசூலுக்கு பிளான் போட்டுள்ளார் என்றும் விஷுவலாக ரொம்பவே அவுட் டேட்டட் ஆகிவிட்டாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.
கமல் தான் காப்பாத்தணும்: சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என யாரை காட்டினாலும் பெரிய இம்பேக்ட்டே வரவில்லை என்றும் கமல்ஹாசனை கடைசியாக இந்தியன் தாத்தா லுக்கில் காட்டும் போது மட்டும் தான் இந்தியன் 2 இன்ட்ரோ நல்லா இருக்கிறது என்றும் அடுத்தடுத்த டீசர்கள் மற்றும் டிரெய்லர்கள் வேறுவிதமாக எடிட் செய்யப்பட்டு வெளியாக வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











