Indian 2: “சம்பவம் இருக்கு... தட்டு, கரண்டிலாம் என்ன குறியீடு..” பரிதாபத்தில் இந்தியன் 2 இன்ட்ரோ!
சென்னை: கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 இன்ட்ரோ தற்போது வெளியானது.
அனிருத் இசையில் மினி பாடலாக வெளியான இந்த இன்ட்ரோ, எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை.
முக்கியமாக இந்த இன்ட்ரோ வீடியோவில் இருக்கும் சில குறியீடுகளை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்தியன் 2 இன்ட்ரோ ட்ரோல் ஓவர் லோடிங்
விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல் நடித்துள்ள இந்தியன் 2, விரைவில் வெளியாகவுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இன்ட்ரோ தற்போது வெளியானது. இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால், ராஜமெளலி, கிச்சா சுதீப், அமீர்கான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், இந்தியன் 2 இன்ட்ரோ வெளியான சில நிமிடங்களிலேயே ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போல லஞ்சம், ஊழல் என தனது பழைய அம்பாசிடர் காரையே பட்டி டிங்கரிங் பார்த்து இந்தியன் 2-வில் ஓடவிட்டுள்ளதாக தெரிகிறது. முக்கியமாக கொரோனா ஊரடங்கின் போது, இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி ஏற்றவும், தட்டுகளில் ஒலி எழுப்பவும் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த சீன்கள் இந்தியன் 2 இன்ட்ரோவில் இருப்பதால் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த காட்சிகள் "கொரோனாவை விரட்ட தட்டு கரண்டியோட சவுண்டு விட்டவங்களுக்கும், வாசல்ல விளக்கு புடிச்சவங்களுக்கும் கொத்து பரோட்டா இருக்கு போலிருக்கே" என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேநேரம், இந்தியன் தாத்தா மீண்டும் வர வேண்டும் என மக்கள் போராடுவதற்காக இந்த சீன்கள் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

விளக்கு ஏற்றுவதும், பாத்திரங்கள் தட்டும் காட்சிகளும் பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. அதேபோல், இப்படியொரு இன்ட்ரோ வீடியோவை வெளியிட ரஜினி, மோகன்லால், அமீர்கான், ராஜமெளலி, கிச்சா சுதீப் போன்ற பான் இந்தியா ஸ்டார்ஸ் எல்லாம் எதற்கு எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எதிர்பார்த்ததை விட மிக மோசமான வரவேற்பைப் பெற்றுள்ள இந்தியன் 2 இன்ட்ரோ, தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











