Indian 2: கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா?: முக்கிய விளக்கம் அளித்த லைகா
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் படத்தின் 2ம் பாகத்திற்கு இந்தியன் 2 என்று பெயர் வைத்து படப்பிடிப்பை துவங்கினார் ஷங்கர். படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் மேக்கப் பிரச்சனையால் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் துவங்கப்பட்டது.
இந்நிலையில் லைகா நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் படம் கைவிடப்படக்கூடும் என்று செய்திகள் வெளியாகின.

லைகா
இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை. சென்னை ஜெனரல் மருத்துவமனை அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று லைகா நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு
இந்தியன் 2 படத்திற்காக பல்வேறு இடங்களில் செட் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றது. அது முடிந்த உடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும் என்று லைகா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஷங்கர்
2.0 படத்திற்கு அதிகம் செலவு செய்து நஷ்டம் ஆனதால் இந்தியன் 2 படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டில் எடுத்து முடிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் ஷங்கரிடம் தெரிவித்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் இருந்து பைனான்ஸியரை கொண்டு வரும் ஐடியாவில் ஷங்கர் இருப்பதாகவும் கூறப்பட்டது.

கமல் ஹாஸன்
முழு நேர அரசியலில் ஈடுபட விரும்பும் கமல் ஹாஸன் இந்தியன் 2 படத்தோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்கிறார். இந்நிலையில் படம் கைவிடப்படவில்லை என்ற தகவல் அவரின் ரசிகர்களுக்கு நிச்சயம் புது உற்சாகத்தை அளிக்கும்.


Click it and Unblock the Notifications











