இந்தியன் 2: ஒரு வழியாக லைகா, ஷங்கர் இடையேயான பிரச்சனை தீர்ந்தது

By Siva

Recommended Video

இந்தியன் 2 கைவிடப்படவில்லை | இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினி |

சென்னை: இந்தியன் 2 படம் தொடர்பான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாம்.

இந்தியன் 2 படம் துவங்கியதில் இருந்தே தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் கமலின் கெட்டப் பிடிக்காமல் ஷங்கர் ஷூட்டிங்கை நிறுத்தினார்.

Indian 2 issues solved: Shooting to resume in June

அதன் பிறகு தேர்தல் வேலைகளில் பிசியாக இருப்பதால் அது முடிந்த பிறகு படப்பிடிப்பை நடத்தலாம் என்று கமல் ஹாஸன் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்.

இதற்கிடையே பட்ஜெட்டை எகிறவிடுகிறார் ஷங்கர் என்று கூறி லைகா நிறுவனம் பிரச்சனை செய்வதாக செய்திகள் வெளியாகின. லைகா வெளியேறினால் வேறு யாரையாவது தயாரிக்க வைக்கலாம் என்ற ஐடியாவில் ஷங்கர் இருந்தார் என்று கூறப்பட்டது.

இல்லை, இல்லை அப்படி எந்த பிரச்சனையும் இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தனர். விளக்கம் அளித்த வேகத்தில் மீண்டும் பிரச்சனை என்ற பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் ஷங்கர், லைகா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாங்களே படத்தை தயாரிக்கிறோம் என்று லைகா வாக்குறுதி அளித்துள்ளதாம்.

வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இதையடுத்து ஜூன் மாதம் படப்பிடிப்பை மீண்டும் துவங்கப் போகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X