அடேங்கப்பா.. ஆண்டவருக்கு இப்படியொரு டைட்டில் கார்டு போட்ட ஷங்கர்.. இந்தியன் 2வில் சும்மா அதிருது!
சென்னை: 'விக்ரம்' படத்துக்கு உலகநாயகன் கமல்ஹாசனின் கண்ணை வைத்தே லோகேஷ் கனகராஜ் டைட்டில் கார்டு ஒன்றை போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அதேபோல கடைசியாக லியோ படத்திற்கு மார்வெல் தீமில் ஒரு டைட்டில் கார்டு இடம்பெற்று விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் டைட்டில் கார்டு எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த கமல் ரசிகர்களுக்கு ஆரம்பமே ஷங்கர் சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார்.
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி கமல்ஹாசன் இதுவரை 232 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான தோற்றம், மேக்கப் என தன்னை ஒவ்வொரு கதாபாத்திரமாகவே மாற்றியவருக்கு சரியான டைட்டில் கார்டு எடிட் டிசைன் செய்ய வேண்டும் என இந்தியன் 2 படக்குழுவினர் தீவிரமாக முயற்சி செய்து இப்படியொரு டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளனர்.

தியேட்டருக்குச் சென்று இந்தியன் 2 படத்தை முதல் நாள் முதல் காட்சியாக பார்க்க சென்ற ரசிகர்களுக்கு இந்தியன் 2 டைட்டில் கார்டே செம கூஸ்பம்ஸ் கொடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் அதனை வீடியோவாக எடுத்தே வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியன் 2 ரிலீஸ்: கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் தான் இந்தியன் 2 படமே அப்படியே ஸ்தம்பித்து போக காரணமாக அமைந்தது. அந்த நிகழ்வு மட்டும் நடைபெறவில்லை என்றால் இந்நேரம் இந்தியன் 3 படமே ரிலீஸ் ஆகியிருக்கும். லைகாவுக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனம் தோள் கொடுக்க 4 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உருவான இந்தியன் 2 திரைப்படம் இன்று வெளியானது.
டைட்டில் கார்டு: களத்தூர் கண்ணம்மாவில் குழந்தையாக கமல்ஹாசன் நடித்தது முதல் அரங்கேற்றம், நாயகன், சத்யா, குணா, இந்தியன், அவ்வை சண்முகி, ஹே ராம், குருதிப்புனல், ஆளவந்தான், சகலகலா வல்லவன், தசாவதாரம், விஸ்வரூபம், இந்தியன் 2 என ஒவ்வொரு படத்துக்கும் எந்தளவுக்கு கமல்ஹாசன் கஷ்டப்பட்டு தனது தோற்றத்தையே மாற்றி ரசிகர்களுக்காக நடித்து வருகிறார் என்பதை ஒவ்வொரு மாஸ்க்காக கழண்டு கடைசியில் இந்தியன் 2 தாத்தா மாஸ்க் வரை வர அதன் பின்னர் அனைத்து மாஸ்க்குகளும் ஒன்றாக சேர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் என்கிற டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளது.
கலவையான விமர்சனம்: இந்தியன் 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. டோலிவுட் ரசிகர்கள் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். 6 ஆண்டு காலமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் வசூலில் சாதிக்குமா? சோதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











