Indian 2: இந்தியன் 2 டீசர் ரெடி.. கமல் சிக்னலுக்காக காத்திருக்கும் ஷங்கர்.. ரிலீஸ் தேதியுடன் அப்டேட்
சென்னை: ஒருவழியாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை இறுதிக்கட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டார். இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியது உள்ளதாம். இந்நிலையில் இந்தியன் 2 டீசரை ரெடி செய்துவிட்டார் இயக்குநர் ஷங்கர். கமல்ஹாசன் சிக்னல் வந்ததும் விரைவில் இந்தியன் 2 டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்தியன் 2 டீசர் ரெடி
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 இந்தாண்டு வெளியாகிறது. 1996ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 தற்போது பல தடைகளை கடந்து வெளியாகவுள்ளது. கமலுடன் எஸ்ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக் ஸ்டார் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் ஷூட் செய்த ஃபுட்டேஜ்கள் அதிகம் இருப்பதால் இதனை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளது படக்குழு. இந்நிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டு தக் லைஃப் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர் இருவரும் நடிக்கவுள்ள பாடல் காட்சிகள் மட்டும் ஷூட் செய்யப்படவுள்ளதாம்.
இதற்கான ஷூட்டிங் ஒருபக்கம் வேகமாக நடந்துகொண்டிருக்க ஷங்கர் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். அதில் முதல் வேலையாக இந்தியன் 2 டீசரை கட் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு முன்னதாக டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதனால் இந்தியன் 2 டீசரை எடிட் செய்து முடித்துள்ள ஷங்கர், அதனை கமலுக்கு போட்டுக் காட்ட காத்திருக்கிறாராம்.
கமல்ஹாசன் பார்த்து முடித்த பின்னர் இந்தியன் 2 டீசர் ரிலீஸ் பற்றி அறிவிக்கப்படவுள்ளதாம். முன்னதாக இந்தியன் 2 ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் வரவிருப்பதால் இந்தியன் 2 ரிலீஸ் என்பதற்கான சுவடே தெரியவில்லை. இதனால் இந்தியன் 2 டீசரில் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிடலாம் என ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். இதுபற்றியும் கமலின் முடிவுக்காக படக்குழு காத்திருக்கிறதாம்.
இந்தியன் 2 டீசர் வெளியானதும் மூன்றாம் பாகத்திற்கான மீதமுள்ள படப்பிடிப்பை முடித்துவிடலாம் என ஷங்கர் பிளான் செய்துள்ளார். அதன்படி இந்தாண்டு இறுதிக்குள் இந்தியன் 3 படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்தாண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











