Indian 2: இந்தியன் 2 ரிலீஸில் சிக்கல்... குழப்பத்தில் கமல், ஷங்கர்... இதுதான் அந்த காரணமா..?

சென்னை: கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியன் 3 படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் பிளான் செய்திருந்தாராம். ஆனால், தற்போது இந்தியன் 2 சொன்னபடி ரிலீஸ் ஆகுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியன் 2 ரிலீஸில் சிக்கல்: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996ல் கமல் - ஷங்கர் கூட்டணியில் சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை, ஷங்கர் - லைகா நிறுவனம் இடையேயான மோதல் என இந்தப் படம் சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. இதனால் இந்தியன் 2 ட்ராப் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

 Indian 2: Kamal Hassans Indian 2 April Month Release Still Not Finalised

ஆனால், விக்ரம் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது. அதேநேரம் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் இயக்கி வந்தார். இந்த இரண்டுமே பான் இந்தியா படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. கமலுடன் எஸ்ஜே சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தியன் 2 இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. அதேநேரம் இதுவரை ஷூட் செய்யப்பட்ட ஃபுட்டேஜ் அதிகம் இருந்ததால் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார் இயக்குநர் ஷங்கர். அதனால் தற்போது இந்தியன் 3 படத்துக்காகவும் கமல் கால்ஷீட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து இந்தியன் 2 ஏப்ரல் மாதமும், இந்தியன் 3 ஆகஸ்ட் அல்லது டிசம்பரில் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் தற்போது இந்தியன் 2 சொன்னபடி ஏப்ரலில் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஒருபக்கம் கமல் தனது போர்ஷனுக்கு டப்பிங் முடித்துவிட்டார். அதேபோல் ஷங்கரும் எடிட்டிங் முடித்த கையோடு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் நிறைவு செய்துவிட்டாராம். ஆனால், 3 பாடல்கள் மட்டும் இன்னும் ஷூட் முடியவில்ல என தற்போது தெரிய வந்துள்ளது.

இதனால், இந்தியன் 2 ஏப்ரல் மாதம் வெளியாகுமா என்பது சந்தேகம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இந்தியன் 2 ஓடிடி உரிமையை 100 கோடிக்கும் அதிகமான விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஏப்ரலில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் ரிலீஸாவது உறுதியாகிவிட்டது. அதேபோல், விரைவில் சூர்யாவின் கங்குவா படமும் ஏப்ரலில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X