Indian 2: கமல் பிறந்தநாள் ஸ்பெஷல்... தாறுமாறாக ரெடியான இந்தியன் 2 க்ளிம்ப்ஸ்... இனி சம்பவம் தான்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2.
லைகா புரொடக்ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுத்து முடித்துவிட்டார்.
இதனையடுத்து தற்போது கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்தியன் 2 அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.
இந்தியன் 2 இன்ட்ரோ க்ளிம்ப்ஸ் ரெடி: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் அ. வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 ஷூட்டிங் முடிந்துவிட்டது. கமலும் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுத்துவிட்டார்.
கமல் - ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்தியன். இந்தப் படத்தின் தொடர்ச்சி தான் இந்தியன் 2 என சொல்லப்படுகிறது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் 2 வெளியாகவிருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் 2ம் பாகத்திலும் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டரான சேனாபதியின் சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் அபிஸியல் அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால், அதற்கு முன்பே இந்தியன் 2 அப்டேட்டை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 3ம் தேதி இந்தியன் 2 இன்ட்ரோ க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ கமலின் இந்தியன் தாத்தா கெட்டப் இன்ட்ரோவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து மேலும் சில தரமான அப்டேட்கள் வெளியாகவுள்ளதாம். முக்கியமாக இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்னொரு பக்கம் மணிரத்னம் இயக்கும் KH 234 டீசரும் கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
அடுத்தடுத்து கமல் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் வரிசைக் கட்டி நிற்கின்றன. அதேபோல், கமல் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான க்ளாஸிக் சினிமாவான நாயகன் திரைப்படம், ரீ ரிலீஸாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியன் 2 க்ளிம்ப்ஸ் அப்டேட் வெளியானதை தொடர்ந்து, கமல், இந்தியன் 2 போன்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











