Indian 2 Intro: மிரட்டலாக வெளியானது இந்தியன் 2 இன்ட்ரோ... கமல் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் 2.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் இன்ட்ரோ தற்போது வெளியாகியுள்ளது.

தமிழில் ரஜினியும், மற்ற மொழிகளில் மோகன்லால், கிச்சா சுதீப், ராஜமெளலி, அமீர்கான் ஆகியோரும் வெளியிட்டுள்ளனர்.

மிரட்டலாக வெளியான இந்தியன் 2 இன்ட்ரோ, படம் மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது.

 Indian 2: Kamal Hassans Indian 2 Intro Teaser released now

வெளியானது இந்தியன் 2 இன்ட்ரோ
உலகநாயகன் கமல்ஹாசன் - பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம், ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 படத்துக்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்தியன் 2 இன்ட்ரோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் கமலின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதேபோல், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் இயக்குநர் ராஜமெளலி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்தியில் அமீர்கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இந்தியன் 2 இன்ட்ரோவை வெளியிட்டனர்.

 Indian 2: Kamal Hassans Indian 2 Intro Teaser released now

எதிர்பார்த்தபடியே இந்த இந்தியன் 2 இன்டரோ, தாறுமாறான சம்பவமாக அமைந்துள்ளது. கமலின் இந்தியன் தாத்தா கேரக்டரான சேனாபதியின் மாஸ் என்ட்ரியாக மெர்சல் காட்டியுள்ளார் ஷங்கர். கமல்ஹாசனின் கெட்டப், லுக் இரண்டுமே பழைய இந்தியன் தாத்தாவை கண்முன் கொண்டு வந்துள்ளது. 1.58 நிமிடங்கள் ரன்னிங் டைமில் அனிருத் இசையில் பாடலாக உருவாகியுள்ளது இந்தியன் இன்ட்ரோ.

 Indian 2: Kamal Hassans Indian 2 Intro Teaser released now

"வணக்கம் இந்தியா - INDIAN IS BACK" என்ற பஞ்ச் வசனத்துடன் கமல் என்ட்ரியாகிறார். இதனால் இந்தப் படமும் லஞ்சம், ஊழல் என ஷங்கரின் பழைய ஃபார்முலா தான் என்பது உறுதியாகியுள்ளது. கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்தியன் 2 இன்ட்ரோ இப்போது தான் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. அதேநேரம் அதிகம் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த இந்தியன் 2 இன்ட்ரோ கொஞ்சம் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X