Kamal: இந்தியன் 2 ஷூட்டிங்... பேக்கப் சொன்ன கமல்... ரிலீஸ் தேதியை முடிவு செய்த ஷங்கர்!!
சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார். இதில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங், தற்போது முடிவடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை கமல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 ரிலீஸ் தேதி அப்டேட்: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வந்தார். இதில், ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 ஷூட்டிங் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங், அடுத்தடுத்து பல தடைகளை சந்தித்தது. முதலில் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிய இந்தியன் 2, பின்னர் கிரேன் விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழந்ததால் மொத்தமாக முடங்கியது.
ஆனால், கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதால், மீண்டும் இந்தியன் 2-ஐ தொடங்கினார் கமல். இந்தமுறை பட தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்ததால், உடனடியாக படப்பிடிப்புத் தொடங்கியது. முன்னதாக இந்தியன் 2 பாதியிலேயே ட்ராப் ஆனதால், ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வந்தார் ஷங்கர்.
ஆனால், பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததால், கேம் சேஞ்சர், இந்தியன் 2 என இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார். சென்னை, திருப்பதி, ஐதராபாத் என பல பகுதிகளிலும் நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு, தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கமல் உட்பட படத்தின் மொத்த போர்ஷனையும் ஷங்கர் முடித்துவிட்டாராம். அதனால், உடனடியாக இந்தியன் 2 போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துவிட்ட ஷங்கர், அப்படியே கேம் சேஞ்சர் படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, இன்று ஐதராபாத்தில் கேம் சேஞ்சர் ஷூட்டிங் தொடங்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதுவும் ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் குறித்து தெரியவில்லை என்றாலும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

அதேபோல், இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை கமலும் ஷங்கரும் சேர்ந்து முடிவு செய்துவிட்டார்களாம். முதலில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2, பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி தான் ரிலீஸாக வாய்ப்பு என சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தியன் 2 படத்தை 2024 மே 1ம் தேதி வெளியிட படக்குழு செய்துள்ளதாம்.
மே 1 உழைப்பாளர்கள் தினம் என்றாலும், சினிமா ரசிகர்களுக்கு அது அஜித்தின் பிறந்தநாளாக தான் பார்க்கப்படுகிறது. அதனால், அதேநாளில் கமலின் இந்தியன் 2 வெளியாகவுள்ளது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











