இந்தியன் 2: கமல் ரஹ்மானை கேட்க, ஷங்கர் ஏன் அனிருத்தை தேர்வு செய்தார்?

By Siva

Recommended Video

ரஹ்மானுக்கு போட்டியாக அனிருத்தை களமிறங்கிய ஷங்கர்- வீடியோ

சென்னை: இந்தியன் 2 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்று கமல் விரும்பியும் ஷங்கர் அனிருத்தை தேர்வு செய்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. 23 ஆண்டுகள் கழித்து கமல் ஹாஸனை மீண்டும் இந்தியன் தாத்தாவாக பார்க்க ஆவலாக உள்ளது.

இந்தியன் படத்தை போன்றே இதுவும் சூப்பர் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்தியன்

இந்தியன்

இந்தியன் படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட். அதற்கு காரணம் ஏ.ஆர். ரஹ்மானின் அசத்தல் இசை. ஆனால் இந்தியன் 2 படத்தில் ரஹ்மானுக்கு பதில் அனிருத் ரவிச்சந்தரை ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர். அது குறித்து ரஹ்மான் சுவாரஸ்யமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான்

இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்குமாறு கமல் என்னை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஷங்கர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரே ஆளுடன் மீண்டும் மீண்டும் வேலை செய்தால் போர் அடித்துவிடும் என்று ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஓவர் வேலை

ஓவர் வேலை

2.0 படத்திற்கு இசையமைத்தது லேசான காரியம் அல்ல. அதனால் தான் என்னிடம் ஓவராக வேலை வாங்க வேண்டாம் என்று ஷங்கர் நினைத்திருக்கலாம். அவர் அனிருத்தை தேர்வு செய்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் ரஹ்மான்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

2.0 படத்தை தயாரித்த லைகா தான் இந்தியன் 2 படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த படம் மூலம் காஜல் அகர்வால் முதல்முறையாக கமலுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இது தான் கமல் ஹாஸன் நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X