Indian 2: ஆஸ்கர் பிரபலத்துடன் இணைந்த உலக நாயகன்... சம்பவத்துக்கு ரெடியான இந்தியன் தாத்தா!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல் - ஷங்கர் இருவருமே பிஸியாக உள்ளனர்.

அடுத்தாண்டு வெளியாகவுள்ள இந்தியன் 2, கமலுக்கு இன்னொரு இன்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2வில் ஹாலிவுட்டை சேர்ந்த ஆஸ்கர் பிரபலம் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 Indian 2: Kamal with Oscar-winning make-up artist Michael Westmore for Indian 2

இந்தியன் 2வில் இணைந்த ஆஸ்கர் பிரபலம்: கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங், பட்ஜெட் பிரச்சினையாலும், கிரேன் விபத்து காரணமாகவும் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால், கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. இதனால் மூன்று வருடங்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2ம் பாகத்தை மீண்டும் தொடங்கினார் இயக்குநர் ஷங்கர். லைகா நிறுவனத்துடன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் இந்தியன் 2 பட தயாரிப்பில் இணைந்தது. இதனால் அசுர வேகத்தில் நடந்து வரும் இந்தியன் 2 ஷூட்டிங், இந்தாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியன் 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கமல் 25 வயது இளைஞன், இந்தியன் தாத்தா என இரண்டு கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம். அதற்காக மேக்கப் போடுவதற்காக மட்டுமே பல மணி நேரங்களை செலவிட்டு வருகிறார். 25 வயது இளைஞன் லுக் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

 Indian 2: Kamal with Oscar-winning make-up artist Michael Westmore for Indian 2

இதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஆஸ்கர் விருது வென்ற மைக்கேல் வெஸ்ட்மோர் இந்தியன் 2வில் இணைந்துள்ளாராம். அவருடன் கமல் எடுத்துக்கொண்ட போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டார் ட்ரெக் படத்திற்காக ஆஸ்கர் விருது வென்றுள்ள மைக்கேல் வெஸ்ட்மோர், இதற்கு முன்பும் கமலுடன் பணிபுரிந்துள்ளார் இந்தியன் முதல் பாகம், தசாவதாரம் படங்களிலும் கமலுக்கு மைக்கேல் வெஸ்ட்மோர் தான் மேக்கப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தியன் 2 படத்திலும் கமலின் கெட்டப் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்ட அப்டேட்களை இயக்குநர் ஷங்கர் விரைவில் அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X