இந்தியன் 2வின் கதறல்ஸ்.. லிரிக்கல் வீடியோ நாளை ரிலீஸ்.. எப்படி இருக்கப்போகுதோ?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் 2 அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். இதில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கிறது படம். இந்தச் சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் கதறல்ஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து உற்சாகமடைந்த அவர்; இந்தியன் 2 பட பணிகளை தூசு தட்டினார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு லைகாவுடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்துகொள்ள படத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

Indian 2 Kamal haasan Anirudh 2

முடிந்த ஷூட்டிங்: அதனையடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படத்தின் முதல் பாகம் எப்படி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல் இதனையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஷங்கரும், கமல் ஹாசனும் மும்முரமாக உழைத்தார்கள். இடையே வசந்தபாலனும் படத்தின் சில காட்சிகளை ஷூட் செய்தார்.

இந்தியன் 2 ரிலீஸ்: படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் வழக்கமான ஷங்கர் டெம்ப்ளேட்டுக்குள்தான் படம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பினார்கள். அதேசமயம் படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்றும்; நிச்சயம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்றும் கமலின் ரசிகர்களும், ஷங்கரின் ரசிகர்களும் ஓபன் ஸ்டேட்மெண்ட்டை சமூக வலைதளங்களில் விட ஆரம்பித்திருக்கின்றனர். படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

படத்தின் பாடல்கள்: இந்தியன் 2வின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும் கதறல்ஸ் என்ற பாடல் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது. அனிருத் இசையமைத்து பாடியிருக்கும் அந்தப் பாடல் குத்து பாடல் ஜானரில் உருவாகியிருக்கிறது. ஆனால் இதில் அனிருத் தனது வேலையை காண்பித்துவிட்டார். முக்கியமாக வரிகள் எல்லாம் சுத்தமாக செட்டாகவில்லை. கேட்பதற்கு அவ்வளவாக சரியாக இல்லை என கூறி இந்தியன் படத்தின் பாடல்களை கம்ப்பேர் செய்து நிறைய மீம்ஸ்களை நெட்டிசன்கள் பறக்கவிட்டனர்.

நாளை வெளியீடு: இந்நிலையில் கதறல்ஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான போஸ்டரில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், நண்டு ஜெகன் உள்ளிட்டோர் சிகப்பு கலர் டி ஷர்ட்டில் இந்தியன் தாத்தா சிலையோடு இருக்கின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்கள், பாடல் வரிகள் ஏனோதானோவென்று இருந்தன; லிரிக்கல் வீடியோவில் ஷங்கரின் மேக்கிங் எப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X