இரண்டு பாகங்களாக வெளியாகிறதா இந்தியன் 2.. தயாரிப்பு தரப்பு விளக்கம்.. ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: இந்தியன் 2 படம் குறித்து வைரலான வதந்திக்கு தயாரிப்பு தரப்பு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

Recommended Video

எதிர் காலத்தை கனித்த உலகநாயகன் | Kamal Hassan, Vijay Sethupathi | Marudhanayagam

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா மற்றும் நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

வைரலாகும் வதந்திகள்

வைரலாகும் வதந்திகள்

சினிமா ஷூட்டிங்கிற்கான தடை தொடர்ந்தாலும், டப்பிங், எடிட்டிங், இசை பணிகள் என சில போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கூடவே அந்த படம் தொடர்பான வதந்திகளும் வைரலாகி வருகின்றன.

பாகுபலி போல

பாகுபலி போல

பாகுபலி படத்தை போல இந்தியன் 2 படம் இரண்டு பாகங்களாக வெளியாகப் போவதாகவும், இந்தியன் 2 படத்தின் ரஃப் கட் முடிந்து மொத்தம் 6 மணி நேரத்துக்கு படம் வந்துள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் பரவின. முன்னதாக, இந்தியன் 2 படத்தையே லைகா நிறுவனம் கைவிடப்போவதாக வெளியான வதந்தியை தயாரிப்பு தரப்பு மறுத்து இருந்தது.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

இந்நிலையில், சில நாட்களாக வைரலாகி வரும் இரண்டு பாகங்களாக இந்தியன் 2 வெளியாகும் வதந்திக்கும் லைகா நிறுவனம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 சதவீதம் ஷூட்டிங் தான் முடிந்திருப்பதாகவும், இரண்டு பாகங்களாக வர வாய்ப்பே இல்லை. இந்தியன் 2 ஒரே பாகமாகவே ரிலீசாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நம்புகிறோம்

நம்புகிறோம்

இந்தியன் 2 போன்ற பெரிய படங்களுக்கு இதுபோன்ற வதந்திகள் பரவுவது இயல்பான விசயம் தான். வேகமாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் லாக்டவுன் முடிவுக்கு வந்து, ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என நம்புகிறோம் என ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு லைகா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X