Indian 2: கமலுக்காக இணைந்த பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ்... இந்தியன் 2 இன்ட்ரோ டீசர் அப்டேட்!

சென்னை: கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2.

லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் நாளை மாலை வெளியாகிறது.

கமலுக்காக இந்த டீசரை வெளியிட பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ் இணைந்துள்ளனர்.

 Indian 2: Mohanlal, Aamir Khan, Kiccha Sudeep, and Rajamouli will release Indian 2 Intro Teaser

கமலுக்காக இணைந்த பான் இந்தியா ஸ்டார்ஸ்
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின்னர் கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை தூசு தட்டிய கமல், தற்போது அதில் முழுவதும் நடித்து முடித்துவிட்டார். கமல், ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

கமல் - ஷங்கர் கூட்டணியில் 1996ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக 'இந்தியன் 2' உருவாகியுள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் - ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இந்தியன் 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தியன் 2 இன்ட்ரோ டீசர், நாளை மாலை வெளியாகவுள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த டீசரை படக்குழு வெளியிடவுள்ளது.

இந்தியன் 2 இன்ட்ரோ டீசரை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி வெளியிடுகிறார். ரஜினியின் 90ஸ் போட்டோவுடன் இந்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதேபோல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் இந்தியன் 2 இன்ட்ரோ டீசர் ரிலீஸ் பற்றியும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இதற்காக பான் இந்தியா ஸ்டார்ஸ் கமலுக்காக இணைந்துள்ளனர்.

மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் இயக்குநர் ராஜமெளலியும் இந்தியன் 2 இன்ட்ரோவை வெளியிடுகின்றனர். அதேபோல், இந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்பிலும் இவர்களது இளம் வயது போட்டோகளை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினி, மோகன்லால், ராஜமெளலி, அமீர்கான், கிச்சா சுதீப் ஆகியோர் 90களின் ரெட்ரோ லுக்கில் மாஸ் காட்டியுள்ளனர்.

 Indian 2: Mohanlal, Aamir Khan, Kiccha Sudeep, and Rajamouli will release Indian 2 Intro Teaser

இதன்மூலம் நாளை வெளியாகும் இந்தியன் 2 இன்ட்ரோ டீசர், கமலின் பிளாஷ்பேக் கேரக்டர் வீடியோவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் படத்தில் சேனாபதி என்ற இந்தியன் தாத்தாவாக மெர்சல் காட்டியிருந்தார் கமல். இந்தியன் 2 படத்தின் முதல் அப்டேட்டாக சேனாபதி கேரக்டர் அறிமுகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X