பிரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகையா? இந்தியன் 2வில் நடித்த ரிஷிகாந்த் ஓபன் டாக்!

சென்னை: இந்தியன் 2 படம் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள ரிஷிகாந்த் இந்த படத்தில் நடித்தது தொடர்பாக நமது ஃபிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார், அது குறித்து இங்கு பார்க்கலாம்.

அந்த பேட்டியில், " இந்த படத்திற்கான அறிவிப்பு வரும்போது அனைவரைப் போலவேதான் நானும் முயற்சி செய்தேன். என்னை டெஸ்ட் செய்த ஷங்கர் சார் நடனம ஆடத்தெரியுமா என்பது உள்ளிட்ட சில கேள்விகளைக் கேட்டார். அதன் பின்னர் ஓ.கே. சொல்லிவிட்டார். இரண்டாவது நாளில் இருந்தே நான் இந்தியன் 2வில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Indian 2 Rishikanth KamalHaasan Shankar Priya Bhavani Shankar

படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களில் நான்தான் மிகவும் அனுபவம் குறைவான நடிகர். பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் தலைசிறந்த டெக்னீஷியன்ஸுக்கு மத்தியில் நடிப்பதை நினைத்து நான் பலமுறை வியந்திருக்கின்றேன். குறிப்பாக கமல் சாரின் தீவிர ரசிகன் நான். அவரது அனைத்து படங்களும் பிடிக்கும். குறிப்பாக தெனாலி, மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி, பஞ்சதந்திரம், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களை திரும்பத்திரும்ப பார்ப்பேன்.

செருப்படி: படப்பிடிப்புத் தளத்தில் கமல்ஹாசன் சார், ஒரு ஷாட்டினை மிகவும் சிறப்பாக கொண்டுவர தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கின்றார். இன்றைக்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ள தொழில்நுட்பம் வரை அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்கின்றது. இன்றைக்கு ரிலீஸ் ஆகியுள்ள படங்கள் குறித்தும் அவருக்குத் தெரிந்துள்ளது. சினிமாவில் ஒருகட்டத்திற்கு வந்த பின்னர் பெரும்பாலானவர்களுக்கு, 'அவ்வளவுதான்.. இதில் இனி ஒன்றும் இல்லை.. பாத்துக்கலாம்' என்ற எண்ணம் வரும். ஆனால் கமல் சாரின் இந்த செயலைப் பார்க்கும்போது எனக்கு செருப்படி வாங்கியதைப் போல் இருந்தது. சினிமாவில் தொடர்ந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளது என அவர் புரியவைத்தார்" என பேசினார்.

ராசியில்லாத நடிகை?: பிரியா பவானி ஷங்கர் ராசியில்லாத நடிகை என பேசப்படுகின்றதே என்ற கேள்விக்கு, " இது என்ன என்றே எனக்கு புரியவில்லை. பிரியா பவானி ஷங்கர் ஒரு சிறந்த நடிகை. அவர் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். எனக்கும் அவர்மீது மதிப்பும் அன்பும் உள்ளது. இதுபோன்ற கமெண்ட்டுகளில் கவனம் செலுத்தாமல் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்" என பதில் அளித்துள்ளார்.

Indian 2 Rishikanth KamalHaasan Shankar Priya Bhavani Shankar

ஷங்கர்: படப்பிடிப்பின்போது, நடைபெற்ற விபத்தில் இருவர் இறந்துவிட்டனர் எனக் கேள்விபட்டபோது வருத்தமாக இருந்தது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நான் வேறுறொரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தேன். நான் ஷங்கர் சார் படத்தில் கமல்சாருடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படம் குறித்த நெகடிவ் கமெண்டுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. எனக்கு ஷங்கர் சாரின் விஷன் மிகவும் பிடிக்கும். எந்திரன் 2 படத்தில் அவர் உருவாக்கிய சிறிய ரக ரோபோ கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. வரும் காலங்களில் எந்த வகையான கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன்" என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X