போடு வெடிய! இணையத்தில் ட்ரெண்ட் ஆன கதறல் பாடல்; லிரிக் வீடியோ இன்று மாலை ரிலீஸ்!

By Mohan Raj

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூன்றாம் பாகம் இந்தாண்டு இறுதியிலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறப்படுகின்றது.

இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா

கடந்த ஒன்றாம் தேதி இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தில் இருந்து வெளியான பாரா பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. குறிப்பாக இந்தியன் படத்தில் இடம்பெற்றிருந்த கப்பலேறிப் போயாச்சு பாடலைப் போல இந்த பாடல் இருப்பதாக பலரும் பாராட்டி இருந்தனர். இதை அடுத்து இந்த படத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற பாடல் என்றால் அது ”கதறல்” பாடல்தான். இந்த பாடல் தற்போது இணையத்தில் ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது. அண்மையில் நடந்து முடிந்த 18 வது மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகளின் போது கூட இந்தப் பாடலை வைத்து இணையவாசிகள் பல வீடியோக்களை உருவாக்கி ட்ரெண்டாக்கி வந்தனர்.

Lyca Productions Director Shankar Kamal Haasan Indian 2 Kadharalz Song Kadharalz Song Lyric Video Anirudh Music

கதறல் பாடல் லிரிக் வீடியோ

இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் கதறல் பாடலின் முழு லிரிக் வீடியோவை இன்று மாலை அதாவது ஜூன் மாதம் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை லைகா புரொடக்ஷன் நிறுவனம் ஒரு ப்ரோமோ வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஏற்கனவே இன்று லிரிக் வீடியோ வெள்யிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்தியன் 2 படக்குழு

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், துப்பாக்கி படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர்களான விவேக், மனோபாலா மற்றும் மாரிமுத்து இந்த படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடாமுயற்சி அப்டேட்

படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் கால அவகாசம் இருப்பதால் லைக்கா நிறுவனம் இந்த ஒரு மாதத்திற்கும் மிகவும் பிரமாண்டமான பிரமோஷன் வேலைகளை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அஜித் ரசிகர்கள் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்த அஜித் தற்போது குட் பேட் அக்ளி படத்திலும் நடித்து வருகிறார். விடாமுயற்சிக்கு பின்னர் கமிட்டான குட் பேட் அக்ளி குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கையில் விடாமுயற்சி குறித்து எந்த அப்டேட்டும் வராதது, வலிமை படம் போல் இந்த படத்திற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டுமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X