Indian 2 movie: கம் பேக் இந்தியன்.. லண்டன் வீதிகளில் சேனாபதி ஃபீவர்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளிலும் அவர்கள் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது லண்டன் நகர வீதிகளில் இந்த படத்திற்கான சேனாபதி ஃபீவரை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கம் பேக் இந்தியன் என அடுத்தடுத்த பல விஷயங்களையும் டான்சையும் இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.

Kamal haasan Indian 2 Shankar 2

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன். சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்கள் மிகச் சிறப்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று மாலை இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த் உள்ளிட்டவர்கள் சிங்கப்பூர், மலேசியாவிலும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர்.

லண்டனில் சேனாபதி ஃபீவர்: இந்நிலையில் லண்டனிலும் இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் இணைந்து சாலைகளில் கம்பாக் இந்தியன் என்று பாடலுக்கு ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது. அனைத்து தரப்பினரையும் இவர்களது இந்த நடனம் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த வாசகங்களுடன் டீ-ஷர்ட்களையும் ரசிகர்களை தூக்கி சுமந்து வருகின்றனர். இந்த படம் இந்திய அளவில் பல மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இதேபோல வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.


1000 கோடி வசூலை தாண்டுமா?: 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தை போலவே இந்தியன் 2 படம் மாஸ் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வகைகளில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் லைகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பலன் இன்னும் சில தினங்களில் அறுவடையாகும் என்றும் படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என்றும் சர்வதேச அளவில் ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்றும் கணிக்கப்படுகிறது. அப்படி நடந்தால் கமல், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கும் மிகப்பெரிய அளவில் இந்த படம் சாதனை படமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதிரடியாக ரிலீசான ட்ரெயிலர்: முன்னதாக படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளையும் தூண்டியுள்ளது. அந்த வகையில் அனிருத் இசையில் அடுத்தடுத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்தின் மூன்றாவது பாகம் உருவாகியுள்ள சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி இந்த படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X