பூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 பட வேலைகள்
Recommended Video

இந்தியன் 2 - ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்
சென்னை: இந்தியன் 2 திரைப்படத்திற்கு செட் அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.
2.0 திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் திரைப்படம் இந்தியன் 2. கமல் ஷங்கர் கூட்டணியில் மாபெரும் வெற்றிப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக செட் அமைக்க பூஜை போடப்பட்டுள்ளது. படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் துவங்குவதாக கலை இயக்குனர முத்துராஜ் ட்வீட் செய்துள்ளார். அதற்கு தயாரிப்பு நிறுவனமான லைகா ரீட்வீட் செய்துள்ளது.
படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட உள்ளதாக தகவல் பரவியது. தற்போது இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் லைகா நிறுவனம் படப்பிடிப்பு தளம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
கமல்ஹாசனுடன் துல்கர் சல்மான் இப்படத்தில் இணைகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
More from Filmibeat
kamalhaasan shankar indian 2 nayanthara chennai tamil cinema கமல்ஹாசன் ஷங்கர் இந்தியன் 2 நயன்தாரா சென்னை தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications











