இந்தியன் 2 வருமா? வராதா? உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ஹாட் அப்டேட்.. கமல் ரசிகர்கள் குஷி!!

சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து வந்த இந்தியன் 2 படம் வருமா, வராதா என கேட்டு கேட்டு, ரசிகர்கள் அந்த படத்தை மறந்தே விட்ட நிலையில், இந்தியன் 2 படம் பற்றிய ஹாட் அப்டேட் ஒன்றை முக்கிய பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பல பிரச்சனைகளால் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் பாதியிலேயே நிற்கிறது. 2020 ம் ஆண்டிற்கு பிறகு இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெறவில்லை. டைரக்டர் ஷங்கர், லைகா ப்ரொடக்ஷன்ஸ் இடையேயான வழக்கு முடிவுக்கு வந்த பிறகாவது ஷுட்டிங்கை துவங்குவார்கள் என எதிர்பார்ப்பட்டது.

ஷங்கர், கமல் பிஸி

ஷங்கர், கமல் பிஸி

ஆனால் கோர்ட் வழக்கிற்கு பிறகு, சமரசம் பேசி ஒரு வழியாக பிரச்சனை முடிந்த பிறகும் ஷுட்டிங்கை மீண்டும் துவங்குவது பற்றி எந்த பேச்சும் இல்லை. ஷங்கர், ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தில் பிஸியாக இருக்கிறார், கமலும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வருவதால் இந்தியன் 2 கைவிடப்பட்டதாக கூட தகவல் பரவியது. இந்த சமயத்தில் இந்தியன் 2 பற்றி நல்ல செய்தி ஒன்றை பிரபலமான ஒருவரே சொல்லி உள்ளார்.

டான் சக்சஸ் மீட்

டான் சக்சஸ் மீட்

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் மே 13 ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இதனை கொண்டாடும் விதமாக சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, உதயநிதி ஸ்டாலின், லைகா நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியன் 2 கன்ஃபார்ம்

இந்தியன் 2 கன்ஃபார்ம்

இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், டான் படம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். எதிர்பாராத இந்த அப்டேட்டை கேட்டு ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். கமலின் அடுத்தடுத்த மிரட்டல்கள் பட்டியலில் இந்தியன் 2 படமும் இணைந்துள்ளது.

Recommended Video

Red Carpet வரவேற்பு... கெத்தாக கலந்துகொண்ட இந்திய சினிமா பிரபலங்கள் |Filmibeat Tamil
இவரே சொல்லிட்டா அப்போ உண்மை தான்

இவரே சொல்லிட்டா அப்போ உண்மை தான்

பல பெரிய படங்களின் தமிழ்நாட்டு விநியோக உரிமத்தை பெற்று வரும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் இந்தியன் 2 படத்தின் வெளியீட்டு உரிமத்தையும் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் படத்தின் வெளியீட்டு உரிமத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் பெற்றிருந்தது. படத்தின் விநியோகஸ்தரே சொல்வதால் இந்தியன் 2 படம் பற்றிய தகவல் உண்மை தான் என்பது உறுதியாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X