Kamal haasan: பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 பட பாடல் சூட்.. என்னது இவ்வளவு கோடி பட்ஜெட்டா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நீளம் கருதி படம் இருவேறு பாகங்களாக உருவாக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 3 படம் இந்த ஆண்டின் இறுதியில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்று மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தற்போது ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படத்தில் சேனாபதி கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் அமெரிக்கா சென்றதாகவும் கூறப்பட்டது. இந்தியன் படத்தின் ட்ரீட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது டபுள் ட்ரீட்டாக இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் வெளியாகவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Indian 2 movie song shoot with Kamal haasan to be shot in grand scale with high budget

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், இசையமைப்பு, பாடகர், பாடலாசிரியர் இவை மட்டுமில்லாமல் சினிமாவிற்கான அடுத்தடுத்த பல டெக்னிக்கல் விஷயங்களையும் தொடர்ந்து கற்கும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். திடீரென பார்த்தால் அவருக்குள் இருக்கும் போட்டோகிராபரும் அடுத்தடுத்து வெளிப்பட்டு வருகிறார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் படம் மிகப்பெரிய இன்டஸ்ட்ரியல் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கமல்ஹாசன் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தார்.

விக்ரம் படம்: இந்த படத்தில் தாத்தா கேரக்டரில் அவர் நடித்திருந்தாலும் அவரது கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. படம் மிகப்பெரிய வசூலையும் பெற்றுக் கொடுத்தது. படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் அதிகமான கேரக்டர்களை வைத்து சிறப்பான திரைக்கதையால் அவர்கள் அனைவருக்கும் சமமாக நடிக்கும் வாய்ப்பை அமைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்டு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் முடங்கிய இந்தியன் 2 படத்தை கையில் எடுத்தார் கமல்ஹாசன்.

இரு பாகங்களாக ரிலீஸ்: இந்த படத்தின் காட்சிகள் நீளம் கருதி தற்போது இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து இந்த ஆண்டிலேயே வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் மே மாதத்தில் கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் இந்தியன் 3 திரைப்படமும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 3 திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் பாடல் காட்சி ஒன்று கடந்து சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் பாடல் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தது.

பிரம்மாண்டமான பாடல் சூட்டிங்: சேனாபதி கேரக்டரின் வரைபடங்களுக்கு இடையில் இந்த பாடலின் சூட்டிங் எடுக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ள பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட உள்ளது. இந்த பாடல் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய படங்களில் எப்போதுமே பிரம்மாண்டத்தை முக்கியமாக கொண்டு இயக்கி வரும் இயக்குனர் சங்கர் இந்த படத்திலும் அதையே தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X