இந்தியன்-2 படத்தின் கதை லீக்கானதா? இன்டர்நெட்டில் தீயாய் பரவும் கதையால் மண்டைக்காயும் ஃபேன்ஸ்!

Recommended Video

Indian 2 Movie: இவரே இப்படி சொன்னால் அப்போ ரஜினி?- வீடியோ

சென்னை: இந்தியன் -2 படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு கதை தீயாய் பரவி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகிறது இந்தியன் - 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல்பிரித் சிங், பிரியா பவானிசங்கர், வித்யூத் ஜமால் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

லைக்கா புரடெக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கியது.

மிண்டும் படப்பிடிப்பு

மிண்டும் படப்பிடிப்பு

ஆனால் கமலுக்கு போடப்பட்ட வயதான தோற்றத்திற்கான மேக்கப் சரியாக செட்டாகாததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்தியன் -2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 12ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

வைரலாகும் கதை

வைரலாகும் கதை

கம்பீர மீசையுடன் வலம்வந்த கமல் இந்தியன் -2 படத்திற்காக மீசையை எடுத்துவிட்டு சிக்கென வலம் வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு கதை வைரலாகி வருகிறது.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர் யூடியூப் சேனலில் அரசியல்வாதிகள் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். இதனால் அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கு ஆளாகிறார்.

இறந்துப்போன மனைவி

இறந்துப்போன மனைவி

இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் வயதான கமல்ஹாசன் அந்த யூடியூப் சேனலை பார்த்து ஆவேசமடைகிறார். ஊழல் அரசியல்வாதிகளை களையெடுக்கும் நோக்கோடு விமானம் ஏறி சென்னைக்கு வருகிறார். இறந்துபோன மனைவியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தும் கமல்ஹாசன், சித்தார்த்தை சந்தித்து ஊழல் செய்து சொத்து குவித்த அரசியல்வாதிகள் பட்டியலை பெறுகிறார்.

சிக்கினாரா இந்தியன் தாத்தா?

சிக்கினாரா இந்தியன் தாத்தா?

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார். அவருக்கு சித்தார்த்தும் வர்ம கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கிறார்கள். அரசியல்வாதிகள் வர்மகலையால் கொல்லப்படுவதை பார்த்து போலீசார் அதிர்கிறார்கள். கமலை பிடிக்க வலை விரிக்கிறார்கள். அவர் சிக்கினாரா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

பதிலளிக்குமா படக்குழு

பதிலளிக்குமா படக்குழு

இப்படி ஒரு கதை சமூக வலைதளங்களில் வைரலாகி இதுதான் இந்தியன் 2 படத்தின் கதை என அதிர வைத்து வருகிறது. ஆனால் இதுதொடர்பாக படக்குழு இதுவரை மறுப்பு தெரிவித்து வாய்திறக்கவில்லை. தீயாய் பரவி வரும் இந்தக் கதையை பார்த்த ரசிகர்கள் இது உண்மையா என மண்டையை பிய்த்துக்கொள்கின்றனர். பதிலளிக்குமா படக்குழு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X