Indian 2 movie: ரிலீசுக்கு தயாராகும் இந்தியன் 2 டீம்.. சூப்பர் பிரமோஷனை துவங்கிய ஷங்கர்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் இந்தியன் 2. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மாஸ் ஹிட்டை கொடுத்தது. இந்தப் படத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரூ என இருவேறு கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் கமல்ஹாசன். படத்தில் வயதான கமல்ஹாசனின் கெட்டப் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. பல மணிநேரங்கள் இந்த கேரக்டரின் மேக்கப்பிற்காக அவர் மெனக்கெட்டதும் அதற்கேற்ற வசூலை ரசிகர்கள் கொடுத்ததும் நடந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த பிராஜெக்ட் பல பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. மேலும் படத்தின் நீளம் கருதி இரு பாகங்களாக இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இரண்டாவது பாகம் கோடைக் கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும் ஒருபுறம் ஜரூராக நடந்து வருகிறது. படத்தின் 50 சதவிகித கிராபிக்ஸ் வேலைகள் நடந்து முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்: விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ளது இந்தியன் 2. இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஷங்கர். முன்னதாக கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்தது. படத்தில் சேனாபதி மற்றும் சந்துரு என இருவேறு கேரக்டர்களின் கமல் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நாட்டில் நடைபெறும் ஊழலை மையமாக வைத்து வெளியான இந்த படம் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
இந்தியன் 2 படம்: இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளின் நீளத்தை கருத்தில் கொண்டு இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து இந்த ஆண்டிலேயே ரிலீஸ் செய்ய தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளது. கோடை கொண்டாட்டமாக வரும் மே மாத இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது இந்தியன் 2 படம். மே மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலையடுத்து இந்த படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த படத்தின் எஞ்சியுள்ள பாடல் காட்சியை இன்று முதல் படக்குழுவினர் எண்ணூர் துறைமுகத்தில் படமாக்கி வருகின்றனர்.
பாடல் காட்சி சூட்டிங்: மிகவும் பிரம்மாண்டமான வகையில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தன்னுடைய படங்களின் பாடல்களை எப்போதுமே பிரம்மாண்டமாக எடுப்பதுதான் ஷங்கரின் வாடிக்கை. அதேபோலவே இந்தப் பாடலும் உருவாகவுள்ளது. இதனிடையே செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளில் இந்தியன் தாத்தா கேரக்டரின் சுவர் ஓவியங்கள் பிரம்மாண்டமான அளவில் வரையப்பட்டுள்ளது. படத்தின் பிரமோஷனாக இந்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சுவர் ஓவியங்களை ஒட்டியே இந்த படத்தின் தற்போது படமாக்கப்பட உள்ள பாடல் காட்சி எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரமோஷன்களில் இந்தியன் 2 படம்: முன்னதாக தன்னுடைய இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தின் ரண்டக்க பாடல் மற்றும் சிவாஜி படத்தின் பல்லேலக்கா பாடல்களில் ஓவியங்களை வரைந்து அதில் பாடல் காட்சிகளை படமாக்கியிருந்தார் இயக்குனர் ஷங்கர். இப்போது இந்தியன் தாத்தா ஓவியங்களும் பிரம்மாண்ட முறையில் வரையப்பட்டு அதில் பாடல் காட்சி படமாக்கப்படுவது ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த சுவர் ஓவியங்கள் படத்திற்கான ப்ரோமோஷனாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











