இந்தியன் தாத்தா வெளிநாட்டிலிருந்து வருவாராம்: இந்தியன் 2 பட சுவாரஸ்யம்
இந்தியன் 2 படத்தில் இந்தியன் தாத்தா வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வர உள்ளார்
சென்னை: இந்தியன் 2 திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் ஹெலிகாப்டரில் லொகேஷன் பார்க்கும் போட்டோ வெளியானதுமே இந்தியன் 2 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகிவிட்டது.

வெளிநாட்டில் ஷூட்டிங், ஸ்பெஷல் மேக்கப் என படத்தில் பல புதுமைகளை நடத்த திட்டமிட்டுள்ளார் ஷங்கர். கதை விவாதத்துக்கு தியாகராய நகரில் இருந்த அலுவலகத்தையும், நகர்புற நெரிசலிலிருந்து விலகி கிழக்கு கடற்கரை சாலைக்கு மாற்றியுள்ளார். அவருடைய வீட்டையும் அங்கே மாற்றிவிட்டாராம்.
ஒரு பக்கம் ஐதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தியன் 2க்காக பிரம்மாண்ட செட் போட்டு வருகிறார்கள். இந்தியன் தாத்தா வரும் பெரும்பாலான காட்சிகளுக்கு போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்தியனுக்கு சாவே கிடையாது என இந்தியன் தாத்தா முதல்பாகத்தில் சொல்வதிலிருந்து படம் ஆரம்பமாகலாம் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு வரும் சேனாதிபதி ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக போராடுகிறார்.
இப்படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா நிறுவன பெரும் தொகையை கொடுத்து அஜய் தேவ்கன் மற்றும் நயன்தாராவின் கால்ஷீட் வாங்கியுள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனுக்காக அனிருத் இசையமைக்கும் முதல்படம் இதுவாகும். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











