Indian 2: ஷங்கர் சாரே கொல மாஸ்.. கத்தியே தேவையில்லை.. கமல் கண்ணே போதும்.. மிரட்டும் இந்தியன் தாத்தா!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் ஷங்கர் சற்று முன் வெளியிட்டு கமல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார்.

90 வயது சேனாபதி தாத்தா என்ன சம்பவம் செய்யக் காத்திருக்கிறாரோ என குலையே நடுங்கும் அளவுக்கு ரசிகர்கள் இந்த போஸ்டரை பார்த்து வருகின்றனர்.

 Indian 2 New poster out, Kamal Haasan looks terrific in Senapathy character

70 வயதிலேயே பெல்ட்டில் கத்தியை வைத்துக் கொண்டு அந்த போடு போட்ட மனுஷன், இப்போ கூடவே ஒரு எக்ஸ்ட்ரா பேக் எல்லாம் வைத்துக் கொண்டு என்ன பண்ணக் காத்திருக்கிறாரோ என ரசிகர்கள் இந்தியன் 2 படத்தின் புதிய சேனாபதியின் போஸ்டரை டீகோடிங் செய்து வருகின்றனர்.

அப்பவே ஜெயிலர் கிளைமேக்ஸ்: 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் சேனாபதி மற்றும் சந்துருவாக நடித்த இந்தியன் திரைப்படம் தேசிய விருதை அள்ளி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக மாறி சுதந்திர போராட்ட வீரர் சேனாபதி ஊழல்வாதிகளை குத்திக் கொல்வார். தப்பு செய்தது தனது மகன் என்று தெரிந்த நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் வசந்த் ரவியை கொல்லும் கிளைமேக்ஸை அப்பவே தப்பு செய்த தனது மகனை இந்தியன் தாத்தா கொன்று விடுவார்.

90 வயது இந்தியன் தாத்தா: 70 வயது இந்தியன் தாத்தாவாக இந்தியன் படத்தில் கமல்ஹாசன் ப்ராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்த நிலையில், 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியன் தாத்தாவாக அதிலும் 90 வயது இந்தியன் தாத்தாவாக கமல் மாறி நடித்துள்ளார். தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டரை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா பர்ஸ்: இந்தியன் படத்தில் பெல்ட்டில் கத்தியை வைத்துக் கொண்டு லஞ்சம் வாங்குபவர்களை ஈவு இரக்கம் எல்லாம் பார்க்காமல் விஷச் செடிகளை பிடிங்கி வீச வேண்டும் என களை எடுத்து இருப்பார். தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் அந்த பெல்ட்டுக்கு அருகே ஒரு சின்ன பேக் ஒன்றும் கூடுதலாக சேனாபதியின் காஸ்ட்யூமில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், கை துப்பாக்கி வைத்திருப்பாரா இந்தியன் தாத்தா என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம்.

கண்ணே போதும்: இந்தியன் தாத்தாவுக்கு கன் எல்லாம் வேண்டாம் கண்ணே போதும், என்னவொரு வெறித்தனமான லுக் அது என சுதந்திர தினத்தன்று வெளியான இந்தியன் 2 போஸ்டரை கமல் ரசிகர்கள் டீட்டெய்ல் பிடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ராம்சரண் ரசிகர்கள் ரகளை: தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த இந்தியன் 2 போஸ்டர் வெளியான நிலையில், ராம்சரண் ரசிகர்கள் கேம் சேஞ்சர் அப்டேட் ஏதும் இல்லையா ஷங்கர் சார் என ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டு ரகளை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X