“பெரியவர்.. புத்திசாலி.. ஆபத்தானவர்”.. மிரட்டும் இந்தியன் 2 போஸ்டர்ஸ்!
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது.
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் ஷங்கர். 2.0 படத்தைப் போலவே இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:
கடந்த பொங்கல் அன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன் அறிவிப்பின்றி டிவிட்டரில் வெளியிட்டு கமல் ரசிகர்களை குஷியாக்கினார் ஷங்கர். முதல் போஸ்டரிலேயே கமலின் மிரட்டலான சேனாபதி கதாபாத்திரம் வர்மக்கலை செய்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
சேனாபதி:
இந்நிலையில், தற்போது அப்படத்தின் மேலும் சில போஸ்டர்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவும் சேனாபதி சம்பந்தப்பட்டவை தான். முதல் பாகத்தில் இருந்ததைவிட அடையாளமே தெரியாத அளவிற்கு இரண்டாம் பாகத்தில் கமல் இந்தக் கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டுள்ளார்.

மிரட்டும் போஸ்டர்:
முதல் பாகத்தில் தான் கேள்விப்பட்ட, பார்த்த, பாதித்த சில சம்பவங்களின் அடிப்படையில் லஞ்சம் வாங்கியவர்களைப் பழி வாங்கினார் சேனாபதி. இரண்டாம் பாகத்தில் இந்தப் பட்டியல் இன்னும் அதிகமாகும் போல. இந்தப் போஸ்டரைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.

ஷூட்டிங் ஆரம்பம்:
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக இந்த போஸ்டர்கள் வாயிலாக படக்குழு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த போஸ்டரில், சேனாபதியின் கதாபாத்திரத்தைப் பற்றி மிரட்டலான ‘கிழம்... புத்திசாலி... வயதானவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











