இந்தியன் 2 “பாரா” பாடல் புரமோ வெளியானது.. கூஸ்பம்ப்ஸா?.. குறை இருக்கா?.. ரசிகர்கள் ரியாக்ஷன்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் அதன் சில நொடி புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
28 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான இந்தியன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ”பச்சைக் கிளிகள் தோளோடு”, “கப்பல் ஏறி போயாச்சு”, “ டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா”, “மாயா மச்சிந்திரா” என ஒவ்வொரு பாடலும் இப்போ ரிலீஸ் ஆனால் கூட மிகப்பெரிய வெற்றிப் பாடல்களாக அமையும்.

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், கம்பேக் இந்தியன் பாடல் ஏற்கனவே வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஜூன் மாதம் வெளியாகிறது வந்த இந்தியன் 2 படத்தையே ஜூலை மாதத்திற்கு தள்ள வேண்டிய நிலைமையில் படக்குழுவினர் உள்ளனர். இனிமேல் தற்போது வெளியாகியுள்ள புரோமோ எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்களின் கமெண்ட்டுகளை வைத்து இங்கே பார்க்கலாம்.
இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்: அனிருத் திசையில் பா விஜய் வரிகளில் உருவாகியுள்ள “பாரா” பாடல் நாளை வெளியாகிறது. அதனை முன்னிட்டு தற்போது அதன் புரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. குதிரையில் கமல்ஹாசன் வளரி கத்தியை எடுத்துக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியன் படத்தில் கத்தி முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இரண்டாம் பாகத்தில் வளரி கத்தியை பயன்படுத்தி இருப்பது சூப்பரான ஐடியா தான் என்ன ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வளரி கத்தியின் மகத்துவத்தை கூறியிருப்பார்கள்.
தேவராவை தொடர்ந்து பாரா: அனிருத் இசையமைத்து இந்த பாடலை பாடியுள்ளார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா படத்தின் ஃபியர் சாங் பாடலை தொடர்ந்து அனிருத் இசையில் பாரா பாடல் பல்வேறு மொழிகளில் நாளை வெளியாக காத்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள சில நொடி பாடல்கள் கூஸ்பம்ஸ் கொடுப்பதாக கமல் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
An Indian rides forth with courage & valor! 🔥 Here's a promo of the 1st single #PAARAA from INDIAN-2. 🇮🇳 Full song is dropping Tomorrow at 5️⃣ PM. 🤩🥁
— Lyca Productions (@LycaProductions) May 21, 2024
Rockstar @anirudhofficial musical 🎹
Lyrics @poetpaavijay ✍🏻
Vocals @anirudhofficial #ShruthikaSamudhrala 🎙️#Indian2 🇮🇳… pic.twitter.com/dz2JeTiqP8
கலாய்க்கும் ரசிகர்கள்: ரஜினிகாந்த் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பாடலா என்று அனிருத் தொடர்ந்து ஏன் மற்ற பாடகர்களை பயன்படுத்தாமல் அவரை பாடிக் கொண்டிருக்கிறார் என்கிற கேள்விகளையும் எழுப்பி இந்தப் பாடலை கலாய்த்து வருகின்றனர். சில நொடி புரமோவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்று நாளை முழு பாடல் வெளியாகவுள்ள நிலையில், அதைக் கேட்டுவிட்டு கருத்து சொல்லலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தியன் 2 ரிலீஸ் தேதி: லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 12ம் தேதி இந்தியன் 2 உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. ஜூன் 1ம் தேதி இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறப் போவதாக கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் பிரபாஸின் கல்கி படத்திலும் கமல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூன், ஜூலை மாதத்தில் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











