இது இயக்குனர் ஷங்கர் கேரக்டரே இல்லையே #Indian2
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் இது ஷங்கர் கேரக்டரே இல்லையே என்கிறார்கள்.
2.0 படத்தை அடுத்து ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் கமல் ஹாஸன் நடிக்கும் கடைசிப் படம் இது.
அந்த காரணத்தினாலேயே படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஷங்கர்
1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 23 ஆண்டுகள் கழித்து எடுக்கப்படுவதே ஒரு பிரமிப்பான விஷயம். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது. ஷங்கரின் பிற படங்கள் போன்று இதுவும் பிரமாண்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஃபர்ஸ்ட் லுக்
பொங்கல் வாழ்த்து தெரிவித்து இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷங்கர் ட்விட்டரில் வெளியிட்டார். பட அறிவிப்பையே பிரமாண்டமாக செய்த அவர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இப்படி சத்தமில்லாமல் வெளியிட்டதை நம்பவே முடியவில்லை. தைவானில் பலூனை பறக்கவிட்டு இந்தியன் 2 அறிவிப்பை வெளியிட்ட அவரா இப்படி மாறிவிட்டார் என்பதே ஆச்சரியம்.

கமல்
இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதனால் பிரமாண்டத்திற்கு நிச்சயம் குறைவிருக்காது. படப்பிடிப்பு துவங்கிய பிறகு பெரிய அளவில் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த்
இந்தியன் 2 படம் தைவானில் துவங்கி இந்தியாவில் முடிகிறதாம். படத்தில் சிம்புவுக்கு பதில் சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக அனிருத் கமல் படத்திற்கு இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











