இந்தியன் 2 வினால் ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைச்சிருக்கு - பிரியா பவானி சங்கர்

சென்னை: ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைத்துவிட்டதைப்போல உணர்கிறேன் என்று இந்தியன் 2 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். எனக்கு பிடித்த நடிகர் நடிகைகள், மிகப்பெரிய இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பது மிகப்பெரிய ஆசிர்வாதம் என்றும் நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் இந்தியன். 1996இல் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லஞ்ச ஊழலுக்கு எதிரான படமாக அமைந்தது. ஊர்மிளா, மனீஷா கொய்ராலா, சுகன்யா என மூன்று நாயகிகள் நடித்தனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திலும் கமல்தான் ஹீரோ. ஒரு நடிகர் பட்டாளமே இந்த படத்தில் களமிறங்குகிறது.

இந்தியன் 2 வில் யார் யார்

இந்தியன் 2 வில் யார் யார்

கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரைத் தொடர்ந்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். படத்தில் இவர், சித்தார்த்துக்கு ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.

சித்தார்த் பிரியா பவானி சங்கர்

சித்தார்த் பிரியா பவானி சங்கர்

ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடித்த சித்தார்த் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் 2 வில் ஷங்கருடன் இணைகிறார். அதேபோல சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வலம் வந்து தனக்கென ரசிகர்களை பிடித்த பிரியா பவானி சங்கர் இந்தியன் 2வில் இணைகிறார்.

சினிமாவில் அறிமுகம்

சினிமாவில் அறிமுகம்

மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பெயர் பெற்றவர். பிரியாவிற்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறியுள்ளனராம். கதையை கேட்ட உடன் ஓகே சொல்லி விட்டாராம் பிரியா பவானி சங்கர்.

உற்சாகமான விசயம்

உற்சாகமான விசயம்

இந்தியன் 2 படத்தில் நடிப்பது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டிருக்கிறார். இந்த பெரிய விஷயம்தான் என்னை இந்த தருணத்தில் உற்சாகப்படுத்துகிறது. நான் இந்த பிரபஞ்சத்தை நம்புகிறேன். உங்கள் செயல்கள் மூலம் நீங்கள் கேட்பதை இந்த பிரபஞ்சம் உங்களுக்குக் கொடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

மிகப்பெரிய ஆசிர்வாதம்

மிகப்பெரிய ஆசிர்வாதம்

கமல்ஹாசனுடன் எனக்குப் பிடித்த நடிகரான சித்தார்த், காஜல் அகர்வால் ஆகியோருடனும் நடிப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. இயக்குநர் ஷங்கரின் இயக்கம் என்றால் மிகப்பெரிய ஆசிர்வாதம். ஒரே நேரத்தில் அனைத்து ஆசிகளும் கிடைத்து விட்டதைப் போல உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் நடிகையர்கள் பட்டாளம் இந்தியன் 2வில் அதிகரித்துக்கொண்டே போகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X