இந்தியன் 2: சேனாபதி இஸ் பேக்.. லைகாவுடன் கைகோர்த்த ரெட் ஜெயண்ட் மூவிஸ்.. படப்பிடிப்பு எப்போ?

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் அந்த கிரேன் விபத்தைத் தொடர்ந்து அப்படியே நிறுத்தப்பட்டது.

Recommended Video

BiggBoss 6புது மாதிரியா இருக்க போகுதாம்...எப்போ ஆரம்பம் தெரியுமா? *TV

லைகா நிறுவனர் சுபாஷ்கரன், இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் என மூவர் மத்தியிலும் கருத்து வேறுபாடு வெடித்ததன் காரணமாக இந்தியன் 2 இனி அவ்வளவு தான் என்கிற நிலை உருவானது.

இந்நிலையில், அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில்

லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பிரம்மாண்ட அறிவிப்பை நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் சேனாபதி லுக்கில் மிரட்டும் புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.

சேனாபதி இஸ் பேக்

சேனாபதி இஸ் பேக்

இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சேனாபதி இறக்கவில்லை என்றும் வெளிநாட்டில் இருந்து அவர் தொலைபேசியில் பேசும் காட்சி ஒன்றும் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில், 90 வயதிலும் சேனாபதி நாட்டில் உருவாகியுள்ள புதிய களைகளை பிடுங்கி எறிய மீண்டும் வருகிறார். பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக போகிறது.

வெல்கம் ஆன்போர்ட் தம்பி

வெல்கம் ஆன்போர்ட் தம்பி

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். லைகாவுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரிக்க முன் வந்துள்ள உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக வெல்கம் ஆன்போர்ட் தம்பி என கமல்ஹாசன் ட்வீட் போட்டுள்ளார்.

சூட்டிங் எப்போ

சூட்டிங் எப்போ

இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகும் என இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். ஆனால், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் செப்டம்பர் முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க போவதாக பதிவிட்டுள்ளார். இந்தியன் 2 சேனாபதி கெட்டப்பில் புதிதாக நடத்தப்பட்ட போட்டோஷூட் பக்காவாக கமலுக்கு பொருந்தியுள்ளது என ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். பெரிய அறிவிப்பு என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் போட்ட உடனே இந்தியன் 2 அறிவிப்பு தான் அது என ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் மாற்றமில்லை

காஜல் அகர்வால் மாற்றமில்லை

இந்தியன் 2 படப்பிடிப்பு இனி நடக்கவே நடக்காது என கடுப்பாகி போய் கல்யாணம் பண்ணி, குழந்தையே பெற்றுக் கொண்டார் காஜல் அகர்வால். அவருக்கு பதிலாக த்ரிஷா முதல் தீபிகா படுகோன் வரை நடிக்கப் போவதாக வதந்திகள் வலம் வந்தன. ஆனால், காஜல் அகர்வால் தான் இப்பவும் நடிக்கிறார் என்பது உறுதி ஆகி உள்ளது. மேலும், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நடிகர்களும் இந்தியன் 2வில் தொடர்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X