இந்தியன் 2க்கு எதிர்மறை விமர்சனங்கள்! நிம்மதியில் ரஜினி? ரியாக்‌ஷனில் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும எதிர்பார்ப்புக்கு இடையில் ரிலீசாகியுள்ளது. உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கப்பட்டு வந்த இந்தியன் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

இதில் இந்தியன் 2 கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருப்பதால், அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. படத்தில் கமல் ஹாசன் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் என படத்தின் டரைலரைப் பார்க்கும்போதே தெரிந்தது என்பதால் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் செம ட்ரீட்டாக அமையும் என ஏற்கனவே இணையத்தில் பேச்சுகள் உலா வந்த வண்ணம் இருந்தது. படத்திற்கான புரோமோஷனை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டது.

Indian 2 Blue Sattai Maran Rajini Kanth Kamal Haasan

படக்குழு: படத்தில் கமல் ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல் கமல் ஹாசனே பல்வேறு கெட்டப்புகளில் வருவதால் படத்தில் ரசிகர்களுக்கு கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் திருப்தி கொடுக்கும் என நம்பிகையோடு படம் பார்க்கச் சென்றனர்.

Indian 2 Blue Sattai Maran Rajini Kanth Kamal Haasan

கலவையான விமர்சங்கள்: படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. ஒரு சிலர் இந்தியன் 2 படம் இந்தியன் 3 பாகத்திற்கான ஒரு இண்ட்ரோ மட்டும்தான். எனவே இந்த படத்தை அப்படியான கண்ணோட்டத்தில்தான் அணுகவேண்டும் என்ற மனநிலையில் படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு படம் திருப்தி கரமாகவே அமைந்துள்ளது. அதேநேரத்தில் படத்தின் டீசர் வெளியான போது, டீசர் மக்கள் மத்தியில் பெரிய ஈர்ப்பையு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், படத்தின் ட்ரைலர் இந்தியன் 2 படத்தின் மீது ஈர்ப்பு இல்லாத மக்கள் மத்தியில் கூட ஈர்ப்பை ஏற்படுத்தியது.

ஓவர் ஹைப்: இந்நிலையில் ட்ரைலரை பார்த்து ஓவர் ஹைப் அடைந்த ரசிகர்கள் படத்தை பார்க்க தியேட்டருக்குச் சென்றனர். ஆனால் படம் ரசிகர்களுக்கு அவர்களுக்கு ஏற்படுத்திய ஹைப்புக்கு தீனி போடவில்லை என நினைக்கும் ரசிகர்கள் இணையத்தில் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. மேலும் பலரும் இது தொடர்பாக மீம் கிரியேட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

Indian 2 Blue Sattai Maran Rajini Kanth Kamal Haasan

ப்ளூ சட்டை மாறன்: அதேபோல், பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியன் 2 படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதை மைய்யப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். அதில் வடிவோலுவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன் முலம் இந்தியன் 2 படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதால் தனது முந்தைய படமான லால் சலாம் படம் பெற்ற எதிர்மறையான விமர்சனங்களில் இருந்து தப்பித்துவிட்டதை நினைத்து ரியாக்‌ஷன் செய்வதைப் போலவும் இதனைப் பகிர்ந்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரஜினி ஷங்கருக்கு கை கொடுப்பதைப் போல் வடிவேலு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Indian 2 Blue Sattai Maran Rajini Kanth Kamal Haasan

மணிரத்னம்: ஏற்கனவே காலையில் மணிரத்னத்தின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என விவேக்கின் புகைப்படத்தை பகிர்ந்து கேப்ஷன் போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ரஜினியின் ரியாக்‌ஷன் என வடிவேலுவின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனை இணையவாசிகள் பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X