இந்தியன் 2! 1500 கோடி வசூல்! 5வது தேசிய விருது கன்ஃபார்ம்! ஆஸ்கார் கதவை உடைப்பது உறுதி - ரோபோ ஷங்கர்
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் ரிலீசாகியுள்ளது. உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் உருவாக்கப்பட்டு வந்த இந்தியன் 2 படம் இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸாகியுள்ளது.
இதில் இந்தியன் 2 கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருப்பதால், அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. படத்தில் கமல் ஹாசன் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். படத்திற்கான புரோமோசனை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டது. படத்தில் கமல் ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகரும் கமல்ஹாசனின் தீவிர ரசிகருமான ரோபோ சங்கர் இந்தியன் 2 படம் குறித்து ஊடகங்களுக்கு படம் பார்க்க செல்வதற்கு முன்னர் பேசியிருந்தார். அதில், 28 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியன் படத்தினை மதுரையில் பார்த்தேன். அண்மையில் இந்தியன் படத்தை ரி ரிலீஸ் செய்தபோதும் குடும்பத்துடன் வந்து பார்த்தேன். மேலும், இந்தியன் 2 படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து பூசணிக்காய் வாங்கி வந்து உடைத்திருகின்றேன்.
1500 கோடி: படம் கட்டாயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த படம் தான் இந்தியன் 2. இந்த படத்தில் உலகநாயகனின் நடிப்பிற்காக அவருக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்கும். அதாவது ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு 5வது தேசிய விருது உறுதி. ஆஸ்கார் கதவு மீண்டும் ஒருமுறை உடைக்கப்படும். படத்தின் வசூல் குறித்து எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். படம் கட்டாயம் ரூபாய் 1500 கோடிகளை வசூல் செய்யும்.

தமிழ்நாடு முழுவதும்: இந்தியன் 2 படத்தினை ரசிகர்களுடன் பார்க்க, தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யப்போகின்றேன். இந்தியன் படத்தின் முதல் பாகத்தை ரீ ரிலீஸில் பார்க்கும்போது கூட மிகவும் பாதுகாப்பாக உரிய அனுமதி பெற்று தியேட்டருக்குள் வெடி வைத்து கொண்டாடினோம். நாங்கள் நேர்மையின், உண்மையின் வாரிசுப் பிள்ளைகள். ஒரு போஸ்டர் ஒட்டினால் கூட சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுத்தான் ஒட்டுகின்றோம். பட்டாசு வெடித்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்கின்றோம் என பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











