நீலோற்பம் நீரில் இல்லை.. இந்தியன் 2 புரமோவே நல்லா இல்லை.. மீண்டும் கம்பேர் பண்ணும் ஃபேன்ஸ்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்மா, எஸ்.ஜே. சூர்யா மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆன "பாரா" பாடலை பா. விஜய் எழுதி இருந்தார். கம்பேக் இந்தியன் பாட்டுக்கு இந்த பாடல் பரவாயில்லை என ரசிகர்கள் பாராட்டினர்.

இந்நிலையில், இரண்டாவது சிங்கிளான "நீலோற்பம் நீரில் இல்லை" பாடல் நாளை வெளியாகிறது. அதனை முன்னிட்டு தற்போது வெளியான புரமோவை கேட்ட ரசிகர்கள் மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் கம்பேரிசனை ஆரம்பித்து அனிருத்தை அடி வெளுத்து வருகின்றனர்.
நீலோற்பம் நீரில் இல்லை: இந்தியன் 2 படத்துக்கு வித்தியாசமான பாடல்களை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் பிரபல கவிஞர்களை அனிருத் பயன்படுத்தி வருகிறார். கவிஞர் தாமரை வரிகளில் உருவான பல பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிடும். வெந்து தணிந்தது காடு படத்தில் அவர் எழுதிய "மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே" பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்தியன் 2 படத்துக்கு ரொமான்டிக் மெலோடி பாடலான "நீலோற்பம் நீரில் இல்லை" பாடலை எழுதியுள்ளார். நீலோற்பம் என்றால் நீல நிற அல்லி மலர் எனக் கூறுகின்றனர். இலங்கையின் தேசிய மலராக இது இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.
பெரிதாக கவரவில்லை: 2 வரிகளை மட்டுமே வெளியிட்டு புரமோஷன் செய்துள்ள நிலையில், அந்த 2 வரிகளும் பெரிதாக ஈர்க்கும்படி இல்லை என்றும் கோப்ரா படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த "தும்பி துள்ளல்" பாடல் போல இருப்பதாக நெட்டிசன்கள் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர். சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்குக்கான காதல் பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு முழு பாடல் வெளியாகிறது. முழு பாடலைக் கேட்ட பின்னர் ரசிகர்களின் மனநிலை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடரும் கம்பேரிசன்: இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனால் கூட இந்த கம்பேரிசன் ஓயாது என்றே தெரிகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இந்தியன் படத்துக்கு அப்படியொரு தரமான ஆல்பத்தை கொடுத்த நிலையில், இந்த விமர்சனங்கள் எழத்தான் செய்யும் படமாக ஜெயித்து விட்டால் அனிருத் தப்பித்து விடுவார் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











