இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா, இல்லையா?: உண்மை இதோ
Recommended Video
சென்னை: கமல் ஹாஸனின் இந்தியன் 2 படத்தின் நிலை என்ன என்பது தெரிய வந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் இந்தியன் 2. கமல் லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்த படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார் ஷங்கர்.

லைகா
பட்ஜெட் பிரச்சனை காரணமாக லைகா நிறுவனம் படத்தில் இருந்து வெளியேறிவிட்டது. அதனால் படம் கைவிடப்பட்டது என்று இரண்டாவது முறையாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது.

படக்குழு
இந்தியன் 2 படம் திட்டமிட்டபடி எடுக்கப்படும். படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை
முழு நேர அரசியலில் ஈடுபட வசதியாக கமல் படங்களில் நடிப்பதை நிறுத்துகிறார். அவர் நடிக்கும் கடைசி படம் இந்தியன் 2. இந்நிலையில் படம் கைவிடப்பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.

தயாரிப்பு
லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை தயாரிக்க தயாராக இல்லை என்றும், ஆனால் அதை சமரசம் செய்து படத்தை முடிக்க ஷங்கர் ஆவலாக உள்ளார் என்றும், இல்லை என்றால் வேறு தயாரிப்பாளரை வைத்தாவது படத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக இரண்டு முறை தகவல்கள் வெளியாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











