இணைந்த வேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்கிய ரெட் ஜெயன்ட்ஸ்: இனி அடுத்தடுத்து மாஸ் அப்டேட் தான்

சென்னை: கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2, பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்தது.

Recommended Video

Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

முக்கியமாக லைகா நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையேயான பட்ஜெட் விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்தியன் 2 தயாரிப்பில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்ததும் தரமான அப்டேட் கிடைத்துள்ளது.

ரசிகர்களை மிரட்டிய இந்தியன் தாத்தா

ரசிகர்களை மிரட்டிய இந்தியன் தாத்தா

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக ஷங்கர் வலம்வரத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் கமலுடன் முதன்முறையாக இணைந்த படம் 'இந்தியன்.' 1996ல் வெளியான இத்திரைப்படம், தமிழ் திரையுலகில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கமல் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில், அவரது இந்தியன் தாத்தா என்ற கேரக்டரை, ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

ஊழல், லஞ்சம், இந்தியன் தாத்தா

ஊழல், லஞ்சம், இந்தியன் தாத்தா

ஊழல், லஞ்ச ஒழிப்பு என ஷங்கர் தனது வழக்கமான பாணியில் இயக்கியிருந்த 'இந்தியன்' படம், வசூலிலும் மாஸ் காட்டியது. கமலுடன் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். இந்தப் படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 'இந்தியன்' சிறப்பான வெற்றிப் பெற்றதால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

பிரம்மாண்டமாக தொடங்கிய இந்தியன் 2

பிரம்மாண்டமாக தொடங்கிய இந்தியன் 2

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் இயக்குநர் ஷங்கரும் இந்தியன் 2 படத்தில் இணைந்தனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் கமல், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங், இசையமைப்பாளர் அனிருத் என பிரம்மாண்டமாக தொடங்கியது இந்தியன் 2. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இயக்குநர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையில் பட்ஜெட் பிரச்சினை விஸ்வரூபமெடுத்தது.

நின்றுபோன இந்தியன் 2 ஷூட்டிங்

நின்றுபோன இந்தியன் 2 ஷூட்டிங்

படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தால் 'இந்தியன் 2' ஷூட்டிங் நின்றுபோக, இன்னொரு பக்கம் பட்ஜெட் விஷயத்தில் பிரச்சினை எழுந்தது. சொன்னதை விட இயக்குநர் ஷங்கர் அதிகம் செலவை இழுத்துவிட்டதாக லைகா நிறுவனம் குற்றம்சாட்டியது. போததற்கு இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதனால், இந்தியன் 2 படம் வெளியாகுமா என கேள்வி எழுந்தது. ஆனாலும், எப்படியும் இந்தியன் 2 படத்தை முடித்தே ஆக வேண்டும் என கமல் உறுதியாக இருந்தார்.

இந்தியன் 2வில் கைகோர்த்த ரெட் ஜென்ட்ஸ்

இந்தியன் 2வில் கைகோர்த்த ரெட் ஜென்ட்ஸ்

இந்தியன் 2 படத்திற்கு பின் கமல் நடித்த விக்ரம் மரண ஹிட் அடித்தது. கமல் தயாரித்திருந்த இப்படத்தை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. இதனால், கமலுக்கும் உதயநிதிக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. இந்த நட்பே இன்று இந்தியன் 2 படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆம்! இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக, ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2

மீண்டும் தொடங்கிய இந்தியன் 2

அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியது படக்குழு. இதற்காக மீண்டும் பூஜை போடப்பட்டுள்ளது. இதில், இயக்குநர் ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட இந்தியன் 2 படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், நடிகர் கமல் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்தியன் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கமலின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

என்ன ஆனது ரம்சரணின் RC 15

என்ன ஆனது ரம்சரணின் RC 15

இந்தியன் 2 ஷூட்டிங் நின்றுபோனதால், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் அவரது 15வது படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். தில் ராஜூ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவந்த RC 15 ஷூட்டிங் தற்போது பாதியில் நிற்கிறது. இதற்கும் பட்ஜெட் பிரச்சினைதான் காரணம் என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X