விபத்து நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு... மீண்டும் தொடங்குகிறது இந்தியன் 2 ஷூட்டிங்?

By

சென்னை: விபத்து காரணமாக தடைப்பட்டிருந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங், வரும் 23 ஆம் தேதி மீண்டும் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Indian 2 Shooting Spot | Crane Crash | Sankar Compensation

இயக்குனர் ஷங்கர், 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்து வந்தது.

கிரேன் விழுந்தது

கிரேன் விழுந்தது

கடந்த மாதம் 19 ஆம் தேதி இரவு நடந்த படப்பிடிப்பின் போது திடீரென கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர். படக்குழுவைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தும் உயிரிழப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிர் தப்பினர்

உயிர் தப்பினர்

இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பற்றி நடிகர் கமல்ஹாசன், இது கொடூரமான விபத்து என்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் கமல், காஜல், ஷங்கர் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

மீளவில்லை

மீளவில்லை

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்தார். இதுபற்றி அவர், இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன். எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இந்நிலையில் இதன் ஷூட்டிங் தொடங்கி விட்டது என்றும் காஜல் அகர்வால் நடிக்கும் பாடல் காட்சியின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. கிட்டதட்ட விபத்து நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருக்கிறது. ஈவிபிக்கு பதிலாக வேறு ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு, வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X