ரஜினிக்கு வந்த அதே பிரச்சினை இப்போது கமலுக்கும்.. யார் பார்க்கும் வேலைன்னு தெரியலையே!
கமலின் இந்தியன் 2 பட ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
போபால் : இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் லீக்காகி இணையத்தில் வைரலாகியுள்ளன.
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சிக்கல்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் உள்பட நிறைய பேர் நடிக்கிறார்கள்.

இந்தியன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருகிறது. எனவே இதிலும் கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் தான் நடிக்கிறார். அதன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.
தற்போது இந்தியன் 2 படத்தின் படிப்பிடிப்பு போபால் அருகே நடந்து வருகிறது. இதில் கமல் கலந்துகொண்டுள்ளார். முக்கியமான சில காட்சிங்கள் அங்கு படம்பிடிக்கபட உள்ளதால், 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் போபாலில் நடந்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் லீக்காகி வைரலாகியுள்ளன. அதில் கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கிறார். அவருக்கு மேக்கப் போடும் புகைப்படங்கள் தான் அவை.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. புகைப்படங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியன் 2 படத்தின் கதை கசிந்தது எல்லோரும் அறிந்தது தான்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படத்திற்கும் இதே பிரச்சினை தான் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் கசிந்துகொண்டே இருந்ததால் படக்குழு செமையாக டென்ஷன் ஆனது. தற்போது கமலின் இந்தியன் 2க்கும் அதே பிரிச்சினை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











