பெரும் அமைதி.. யாருமே பேசவில்லை.. சோகத்திற்கு பின் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்.. என்ன நடக்கிறது?

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று முதல்நாள் விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

Recommended Video

Indian 2 Shooting Spot Incident detailed | EVP Film City | Director Shankar | Kamal Hassan

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று முதல்நாள் விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல் நாள் மாலை இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. கோலிவுட்டை இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என்ன சோகம்

என்ன சோகம்

இந்த சோகமான நிகழ்விற்கு பின் இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இன்று காலை படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. இந்த படத்திற்கு அதிக அளவில் பட்ஜெட் போடப்பட்டு இருக்கிறது. இதனால் படத்தை பல நாட்கள் தள்ளி வைக்க முடியாதது. ஆகவே இன்று அதிகாலை ஷூட்டிங் தொடங்கியது.

படம் தயாரிப்பு

படம் தயாரிப்பு

படத்தின் தயாரிப்பு குழு கேட்டுகொண்டதன் பெயரில் இன்று மீண்டும் ஷூட்டிங் நடந்தது. நேற்று விபத்து நடந்த அதே இடத்தில்தான் இன்றும் ஷூட்டிங் நடந்து இருக்கிறது. அங்கு புதிய கிரேன் கொண்டு வந்து இருக்கிறார்கள். முன்பை விட குறைவான எடையில், குறைந்த எண்ணிக்கையில் விளக்குகளை பொருத்தி இருக்கிறார்கள்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

பின் 4 மணி நேரம் ஷூட்டிங் நடந்து இருக்கிறது. அதிகாலை வெளிச்சத்தில் இந்த ஷூட்டிங் நடந்துள்ளது. ஆனால் பட ஷூட்டிங் போது, அந்த இடமே பெரிய அளவில் அமைதியாக இருந்தது. யாரும் யாருடனும் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து கூட பேசவில்லை என்று கூறுகிறீர்கள்.

விபத்து காரணம்

விபத்து காரணம்

நேற்று முதல்நாள் ஏற்பட்ட விபத்து காரணமாக எல்லோரும் இறுக்கமான முகத்துடன் இருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலர் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்று மிகவும் அமைதியாக இந்தியன் 2 ஷூட்டிங் நடந்தது. புதிய உதவி இயக்குனர்கள் இன்று பணிக்கு சேர்நது இருந்தனர் என்றும் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X