twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம்: காரணம் கமல் ஹாஸன்

    By Siva
    |

    Recommended Video

    இந்தியன் 2: ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே பெரிய பிரச்சனை- வீடியோ

    சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் ஹாஸனை வைத்து இயக்கி வருகிறார் ஷங்கர். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்காக பிரமாண்ட செட்டுகள் அமைத்துள்ளனர்.

    இந்நிலையில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    'நான் அங்கு இல்லவே இல்லை.. ப்ளீஸ் என்னைக் காயப்படுத்தாதீர்கள்'.. தாக்குதல் குறித்து ஜூலி வேதனை! 'நான் அங்கு இல்லவே இல்லை.. ப்ளீஸ் என்னைக் காயப்படுத்தாதீர்கள்'.. தாக்குதல் குறித்து ஜூலி வேதனை!

    தேர்தல்

    தேர்தல்

    மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கும் மக்களவை தேர்தலில் 40 இடங்களில் போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல் ஹாஸன் அறிவித்துள்ளார். தேர்தலில் அவரும் போட்டியிடுகிறார். தேர்தல் வேலையில் பிசியாக உள்ளதால் கமலால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.

    ஷங்கர்

    ஷங்கர்

    தேர்தல் வேலை இருப்பதால் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கமல் ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கப்படுமாம்.

    நிறுத்தம்

    நிறுத்தம்

    இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. முன்கூட்டியே துவங்க வேண்டியது தள்ளிப் போனது. பின்னர் கமலின் மேக்கப் சரியில்லை என்று கூறி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கமலின் அரசியல் வேலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    பட்ஜெட்

    பட்ஜெட்

    முன்னதாக பட்ஜெட் விஷயத்தில் ஷங்கர் மற்றும் லைகா இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஒரு பிரச்சனையும் இல்லை, படம் எல்லாம் கைவிடப்படவில்லை என்று லைகா விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indian 2 shooting has been stopped for now as Kamal Haasan is busy with Lok Sabha Election work.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X