இந்தியன் 2... 'தாத்தா' கெட்டப்பை பார்த்து மிரண்டுபோன படக்குழு!

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 14ம் தேதி முதல் துவங்குகிறது.

Recommended Video

மக்களுடன் பஸ் பயணம் , டீ என்று ஜாலி செய்த இந்தியன் 2 | Kamal Haasan rides in local bus.

சென்னை: இந்தியன் 2 படத்தில் கமலின் வயதான தோற்றம் மிரட்டலாக உருவாக்கப்படுகிறதாம். வரும் 14ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.

2.0 பட ரிலீசைத் தொடர்ந்து இந்தியன் 2 படவேலைகளைத் துவக்கி விட்டார் இயக்குநர் ஷங்கர். 22 வருடங்களுக்கு முன் ரிலீசான முதல் பாகத்தில் நாயகனாக நடித்த கமலே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான்.

சமீபத்தில் இப்படத்தின் போட்டோஷூட் நடந்துள்ளது. இதற்காக இந்தியன் தாத்தா கெட்டப் போட்டு போஸ் கொடுத்துள்ளார் கமல். அப்போது அவரின் தோற்றத்தைப் பார்த்து செட்டில் இருந்தவர்கள் மிரண்டு விட்டார்களாம். அனைவரையும் புல்லரிக்க வைக்கும் விதத்தில் அவர் போஸ் கொடுத்து அசத்தி விட்டாராம்.

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள்:

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள்:

கமலின் இந்தியன் தாத்தா தோற்றத்திற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வரும் 14ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஊழல் தான் கதைக்களம்:

ஊழல் தான் கதைக்களம்:

சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. பின்னர், பொள்ளாச்சியில் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. முதல் பாகத்தில் லஞ்சத்திற்கு எதிராக போராடிய இந்தியன் தாத்தா, இரண்டாம் பாகத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சண்டையிட இருக்கிறார்.

பிரமாண்டம்:

பிரமாண்டம்:

இந்தியன் படத்தில் பாடல்களில் தான் அதிகளவு தொழில்நுட்பத்தை ஷங்கர் பயன்படுத்தி இருந்தார். ஆனால், இரண்டாம் பாகத்தை 2.0 படம் போன்று பிரமாண்டமாக தொழில்நுட்ப உதவியுடன் படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

விஜய் சேதுபதி வில்லன்?

விஜய் சேதுபதி வில்லன்?

இந்தியன் 2 படத்தில் ஒரு நாயகியாக நயன் தாரா நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X