இந்தியன் 2: கமல் பேரன் சிம்பு இல்லையாம் சித்தார்தாம், அப்புறம்...

By Siva

சென்னை: இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு பதிலாக சித்தார்த் நடிக்க உள்ளாராம்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் 2ம் பாகம் எடுக்கப்படுகிறது. படப்பிடிப்பு நாளை மறுநாள் துவங்க உள்ளது.

இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சித்தார்த்

சித்தார்த்

இந்தியன் 2 படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாகவும், கமல் ஹாஸனின் பேரனாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் சிம்புவுக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்க உள்ளாராம். 2003ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தில் சித்தார்த், ஷங்கர் சேர்ந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒன்று சேர்கிறார்கள்.

பே சூசி

பே சூசி

இந்தியன் படத்தில் வயதான கமல் வெளிநாட்டில் இருப்பது போன்று படம் முடிந்தது. 2ம் பாகம் தைவானில் துவங்கி இந்தியாவில் முடிவது போன்று எடுக்கிறாராம் ஷங்கர். தைவானில் வரும் காட்சிகளில் கமலுடன் தென் கொரிய நடிகை பே சூசி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு முதலில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. படத்தில் காஜல் அகர்வாலுக்கு என்ன கதாபாத்திரம் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சுகன்யாவுக்கு பாட்டி வேடம் போட்டபோதே ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் காஜலுக்கு பாட்டி வேடம் போட்டால் அவரின் ரசிகர்கள் தாங்க மாட்டார்கள்.

அனிருத்

அனிருத்

இந்தியன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திலும் அவர் எஸ்.பி.பி.யை அழைத்து வந்து இரண்டு வரி மட்டும் பாட வைக்காமல் இருந்தால் நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X